Suriya: கருப்பானாக சூர்யா.. கருப்பு பட கிளைமேக்ஸ் காட்சி மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Suriyas Karuppu Climax Making Video: நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படமாக வெளியாகியிருந்ததுதான் கருப்பு. இப்படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவரும் நிலையில், வசூலை வாரி குவிகிறது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக சூர்யா தயாரான மற்றும் கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
தென்னிந்திய சினிமா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாகி திரையரங்ககையே அலறவிட்டுவரும் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதில் சூர்யா நாயகனாக நடிக்க, அவருடன் திரிஷா (Trisha), இந்திரன்ஸ் மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், இதில் அவரே மெயின் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரான இப்படத்திற்கு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் திரையரங்கமே தீப்பிடித்து எரிந்தது என கூறலாம். அவ்வாறு இப்படத்தின் இசை அருமையாக ருந்தது.
அதிலும் இப்பட கிளைமேக்ஸ் காட்சியில் சூர்யா, கருப்பசாமியாக அவதார எடுத்து, நடனமாடிய காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்க வைத்தது என கூறலாம். இந்நிலையில் கருப்பு பட கிளைமேக்ஸ் காட்சி மற்றும் சூர்யா கருப்பானாக தயாரான காட்சி குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: LCU-வில் நுழைந்த மாஸ் ஹீரோ.. ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
கருப்பு படக்குழு வெளியிட்ட கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:
The divine fury that shook the climax of #Karuppu, brought to life with unmatched intensity by THE ONE @Suriya_offl 🔥
Crafted to perfection by the skilled make-up team of “Kalai Sudarmani” Minnal Moorthy, Selvam & Muruganantham.
A feast by @RJ_Balaji and team.
A @SaiAbhyankkar… pic.twitter.com/AT7kknRjGb— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 31, 2026
கருப்பு திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் கருப்பசாமியாக கார்த்தி நடித்திருந்தார் என பலரும் பல விமர்சனங்களை எழுப்பிவந்தனர். இந்த விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கருப்பு பட கிளைமேக்ஸ் காட்சியின்போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கருப்பசாமியாக சூர்யாவிற்கு மேக்கப் போடும் காட்சி மற்றும் கிளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகளில் சூர்யா நடித்திருந்தது தொடர்பான காட்சிகளை மேக்கிங் வீடியோவாக படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: கருப்பு சூப்பர் ஹிட்.. ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த சூர்யா!
கருப்பு திரைப்படமானது கிட்டத்தட்ட 16 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெளியாகிவருகிறது. இப்படமானது உலகமெங்கும் இதுவரை கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. விரைவில் ரூ 350 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியாகி, மிக பிரம்மாண்டமான படமாக கருப்பு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.