கருப்பு படத்திலிருந்து வெளியானது ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ
Aathi Raasathi Video Song Out Now | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து ஆத்தி ராசாத்தி பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் கருப்பு. இந்தப் படத்தின் பணிகள் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி இருந்தாலும் படத்தின் பணிகள் பல தடைகளைத் தாண்டி உருவானது. அப்படி உருவான படத்தை படக்குழு எளிதில் திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு குறிப்பிட்ட நேரத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனது. தொடர்ந்து அந்த பிரச்சனைகளை முடித்துவிட்டு கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இந்தப் படம் உலக அளவில் 15 நாட்களில் ரூபாய் 300 கோடிகளை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படம் செய்த வசூல் சூர்யாவின் நடிப்பில் இதுவரை வசூலிக்கவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கருப்பு படத்திலிருந்து வெளியானது ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ:
தொடர்ந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ரசிகர்களிடையே கருப்பு படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்து வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் இருந்து ஆத்தி ராசாத்தி என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகி உள்ள இந்தப் பாடல்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Parimala And Co: பாபநாசம் பட பாணியில்… ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A melody that finds its way straight to the heart. ❤️🎵
#AathiRaasathi video song OUT NOW
🔗 https://t.co/IfM7NTMr3B🎶 @abhyankkar
🎙 #dhassbenjamin
✍️ @pavijaypoet@Suriya_offl‘s #Karuppu
A feast by @RJ_Balaji and team.#KaruppuBlockbuster #VeeraBhadrudu @trishtrashers… pic.twitter.com/HbI5wpq8FV— Think Music (@thinkmusicindia) May 30, 2026
Also Read… நான் டான்ஸ் மாஸ்டர் ஆக முக்கிய காரணம் சிம்பு சார் தான் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி