AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்ஸிக் படத்தை பார்த்தபிறகு உங்கள் எண்ணம் மாறிவிடும் – கியாரா அத்வானி

Actress Kiara Advani Talks Abour Toxic Movie : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டாக்ஸிக் படம் குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

டாக்ஸிக் படத்தை பார்த்தபிறகு உங்கள் எண்ணம் மாறிவிடும் – கியாரா அத்வானி
கியாரா அத்வானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 17:01 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடிகயாக நடிக்கத் தொடங்கினார் நடிகை கியாரா அத்வானி. அதன்படி இந்தி மொழியில் நாயகியாக நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வந்த இவர் பிறகு தெலுங்கு மொழியிலும் அவ்வபோது நடித்து வந்தார். அதன்படி இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை கியாரா அத்வானி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி நடிகை கியாரா அத்வானி நடிப்பில் இதுவரை வெளியான எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி, பரத் என் நேனு, லஸ்ட் ஸ்டோரி, கபீர் சிங், கில்டி, கேம் சேஞ்சர் என பலப் படங்களில் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டாக்ஸிக். கன்னட சினிமாவில் உருவான இந்தப் படத்தின் மூலம் நடிகை கியாரா அத்வானி கன்னட மொழியில் நடிகையாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டாக்ஸிக் படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டாக்ஸிக் படத்தை பார்த்தபிறகு உங்கள் எண்ணம் மாறிவிடும்:

‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆண்-பெண் உறவுகளைப் பற்றிய உங்கள் பார்வையை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. கீத்து மோகன்தாஸ் கதையை விவரித்தபோது, ​​இது ஒருவேளை வழக்கத்திற்கு மாறானதாகவும், தெளிவற்றதாகவும் இருக்கலாம் என்றாலும், இதுவும் இயல்பானதாக இருக்கக்கூடும் என்று எனக்கே தோன்றியது. ஆனால், காதலில் ஒருவிதமான விடுதலை இருக்கிறது. ஆஹா, நானும் என் சொந்த எண்ணங்களில் இவ்வளவு திறமையாகவும், பற்றற்றவளாகவும், விடுதலையாகவும் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு முழுமையான நாடகத் திரைப்படம், மேலும் இந்தப் படத்தைப் பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதில் மிகுந்த கடின உழைப்பு தேவைப்படுகிறது, மேலும் இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாகும். நான் செய்ததற்கு பார்வையாளர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க நான் உற்சாகமாகவும் ஆவலாகவும் இருக்கிறேன்.

Also Read… Pandiraj: பசங்க 3 பண்ணனு ஆசை.. ஸ்கிரிப்ட் ரெடி – அப்டேட் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

இணையத்தில் வைரலாகும் கியாரா அத்வானி பேச்சு:

Also Read… Lokesh Kanagaraj: காட்டாளன் படத்தில் கேமியோ வேடத்தில் லோகேஷ் கனகராஜ் – போஸ்டரை பகிர்ந்த படக்குழு!

Follow Us