சூர்யா சார் ஒரு சிறந்த மனிதர் – நடிகர் நஸ்லேன் புகழாரம்
Actor Naslen Talks About Suriya | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பெருமையாக பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் நஸ்லேன். இவர் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவன் கதாப்பாத்திரம், நாயகனின் நண்பன் என தொடர்ந்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு என்ற படத்தில் நாயகனாக நடித்த பிறகு சினிமாவில் நாயகன் அந்தஸ்து கிடைத்தது. மேலும் இந்தப் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர் நஸ்லேனுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இந்த பிரேமலு படத்தின் மூலமாகதான். இந்தப் படத்தில் நாயகியாக நடித்த நடிகை மமிதா பைஜூ தற்போது வரிசையாக தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து மலையாள சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நாயகனாக நடித்து வந்த நடிகர் நஸ்லேன் தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 47 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் நஸ்லேன் சூர்யா குறித்தும் சூர்யா 47 படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சூர்யா சார் மிகுந்த பணிவும், இயல்பான எளிமையும் கொண்டவர்:
படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது; இது அடுத்த மாத இறுதி வரை தொடரும். இந்த முழு செயல்முறையையும் நாங்கள் வெகுவாக ரசித்து வருகிறோம். சூர்யா சார் எனது தமிழைப் பாராட்டி, அது நன்றாக இருப்பதாகக் கூறினார். சூர்யா சார் ஒரு அற்புதமான மனிதர். மிகவும் பணிவானவர் மற்றும் எளிமையானவர். பல தருணங்களில், நான் உண்மையில் சூர்யா சாருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறேனா என்று எனக்கே வியந்து கேட்கும் நிலைக்கு நான் ஆளானேன்.
சிறுவயது முதலே நான் அவரைப் பெரிதும் போற்றி வருகிறேன். அவர் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நடிகராகத் திகழ்ந்து வருகிறார். என்னைக் கலந்துகொள்ளச் செய்யாமலேயே படத்தின் சில பகுதிகளை அவர்கள் படமாக்கியுள்ளனர். எனவே, சண்டைக்காட்சி ஒன்றில் மோகன்லால் இடம்பெறும் வகையிலான பாடல் ஏதேனும் உள்ளதா என்பது எனக்குத் துல்லியமாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… கே.எஸ்.ரவிக்குமாரின் அந்த படத்திற்கு இரண்டு க்ளைமேக்ஸ் – உங்களுக்கு தெரியுமா
இணையத்தில் வைரலாகும் நஸ்லேன் பேச்சு:
– The shoot is currently underway and will continue until the end of next month. We’re truly enjoying the entire process. Suriya sir even complimented me on my Tamil, saying it was good.
– Suriya sir is a wonderful human being, extremely humble and… pic.twitter.com/NxhJFkknaY
— Movie Tamil (@_MovieTamil) May 26, 2026
Also Read… சினிமாவில் 25 வருடங்களை கடந்த லிங்குசாமி… கொண்டாடிய பிரபல இயக்குநர்கள்