முதலில் ஹனிமூன் கோச்.. இப்போ மத சடங்கு.. இணையத்தில் வைரல் வீடியோ – ரயில்வே துறை கொடுத்த விளக்கம்..
சலூன் பெட்டி என்பது உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனியார் சொகுசு ரயில் பெட்டி என்றும், அதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறைகள், சிறிய சமையலறை, வரவேற்பு மற்றும் உணவருந்தும் அறை, இணைப்பு குளியலறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருப்பதாக வடக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ஜூலை 13, 2026: ரயிலுக்குள் மத சடங்கு நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலான “ஹனிமூன் கோச்” வீடியோவுக்கு அடுத்ததாக வெளியான இந்தக் காட்சியால், பயணிகள் பெட்டிகளில் இதுபோன்ற மத சடங்குகளை நடத்த அனுமதி உள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது.
ரயில் பெட்டியில் மத சடங்கு:
After honeymoon coach, now worship rituals in saloon coach of Indian Railways. Indian Railway is becoming circus. pic.twitter.com/5UwZIJAdGb
— VIZHPUNEET (@vizhpuneet) July 12, 2026
சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருந்த பூசாரி ஒருவர் பூஜை நடத்துவது பதிவாகியுள்ளது. மேலும், வெள்ளை நிற உடை அணிந்திருந்த பலர் அந்த பூஜையில் பங்கேற்றதும் வீடியோவில் காணப்பட்டது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வடக்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வே தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்:
👉🏻 The Saloon Car was booked by IRCTC on 08.07.26.The party made an advance payment of Rs 3,08,580
as commercial booking. The Saloon Car was to be attached in Train No. 12926 Paschim Express on one way journey from New Delhi (NDLS) to Mumbai (BDTS) on 10.07.2026.👉🏻NR issued…
— Northern Railway (@RailwayNorthern) July 12, 2026
அதில், இந்த மத சடங்கு வழக்கமான பயணிகள் பெட்டியில் நடைபெறவில்லை என்றும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) மூலம் தனியார் தரப்பினர் முன்பதிவு செய்திருந்த சிறப்பு சலூன் (Saloon) பெட்டியில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மேலும், சலூன் பெட்டி என்பது உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தனியார் சொகுசு ரயில் பெட்டி என்றும், அதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறைகள், சிறிய சமையலறை, வரவேற்பு மற்றும் உணவருந்தும் அறை, இணைப்பு குளியலறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருப்பதாக வடக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.