AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Improved IRCTC Website | இந்தியாவில் ரயில் போக்குவரத்து பிரதானமாக உள்ள நிலையில், ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவர்கள் ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசியின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய தளம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Jul 2026 12:14 PM IST

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Tourism Corporation) தனது இணையதளத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் இணையதளத்தில் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலையில், அவருக்கு தீர்வு காணும் வகையில், புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த இணையதளத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிக்கெட் முன்பதிவுக்கான பிரதான சேவை

இந்திய ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளை பயன்படுத்தி முன்பதிவு செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சுமார் 82 சதவீதம் பயணிகள் ஐஆர்சிடிசியின் இணையதளத்தில் தான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு தக்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏராளமான பயணிகள் சர்வர் சிக்கலை எதிர்க்கொள்கின்றனர்.

இதையும் படிங்க : Gold Price : 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இவ்வாறு அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதன் காரணமாக பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தொடர் புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐஆர்சிடிசி இணையதளம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐஆர்சிடிசி இணையதளம் மேம்படுத்தப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. இதற்கான முன்னோட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவை எளிமையானதாகவும், தடையின்றி செய்வதையும் நோக்கமாக கொண்டு 4 முக்கிய மேம்பாட்டு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : கடும் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படுமா?

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது தோன்றும் தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப் அப்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து வகுப்புகளிலும் இருக்கை கிடைப்பதை ஒரே பார்வையில் பார்க்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us