EPFO : 2026 நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை அறிவித்த இபிஎஃப்ஓ.. பயனர்களுக்கு விரைவில் வரவுள்ள குட் நியூஸ்!
EPFO Interest Rate Remain Unchanged | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி வழங்கும். இந்த வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருந்து வந்த நிலையில், 2026 - 2027 நிதியாண்டுக்கும் அதே தொடர்வதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகம், ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கை தொடங்கி அந்த கணக்கில், ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வரவு வைக்கும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்காமலே வைத்திருந்தாலும் அதற்கான வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டி தொடர்பான முக்கிய அறிவிப்பை தான் தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2026 – 2027 நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை அறிவித்த இபிஎஃப்ஓ
இதுவரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக வைத்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்குள்ளாக வட்டி விகிதம் அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் முழுவதுமே இபிஎஃப்ஓ வட்டி விகிதத்தை அறிவிக்காமலே இருந்தது. இந்த நிலையில் தான், தற்போது வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை கடைபிடித்து வந்ததை போலவே இந்த நிதியாண்டும் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே தொடரும் என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Gold : அமெரிக்காவை விட அதிக தங்கம் வைத்துள்ள இந்திய மாநிலம்.. கோல்டு கேப்பிடல் இதுதான்!




மேம்பாட்டு பணிகள் காரணமாக தாமதமான அறிவிப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் விரைவில் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அமல்படுத்தப்பட உள்ளது. அதில் பிஎஃப் பணத்தை ஏடிஎம், யுபிஐ மூலம் ஒரு சில நிமிடங்களில் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் காரணமாக இந்த நிதியாண்டுக்காக வட்டி விகிதம் அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓவில் வந்த புது ரூல்ஸ்.. ரூ.1,800 விதி என்றால் என்ன?.. ஊழியர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்!
இபிஎஃப்ஓ தொடர்ந்து மூன்றாவது வருடமாக தனது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில், இது குறித்து கூறியுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment) தகுதியுள்ள அனைத்து இபிஎஃப் பயனர்களின் கணக்குகளிலும் வட்டி தொகையை வரவு வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.