Gold : அமெரிக்காவை விட அதிக தங்கம் வைத்துள்ள இந்திய மாநிலம்.. கோல்டு கேப்பிடல் இதுதான்!
Gold Capital Of India | இந்திய பொதுமக்கள் மத்தியில் தங்கத்தின் பயன்பாடு பரவலாகவே உள்ளது. ஏராளமான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவை விட அதிக தங்கம் வைத்துள்ள, கோல்டு கேப்பிடல் என அழைக்கப்பட கூடிய இந்திய மாநிலம் எது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் தங்கம் (Gold) ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமன்றி, உலக வங்கிகளும் தங்கத்தை வாங்கி சேமிக்கின்றன. அந்த அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் லாபகரமான உலோகமாக தங்கம் உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம், இந்தியர்களுக்கு தங்கம் ஒரு முதலீடு மற்றும் அல்ல. அது அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் அம்சம். ஏதேனும் சுப காரியங்கள் என்றால் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது பயன்படுத்துவதை இந்தியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த காரணமாக இந்திய மக்கள் மத்தியில் தங்கத்தின் நுகர்வு குறையாமல் உள்ளது.
அமெரிக்காவுக்கு இணையாக தங்கம் வைத்துள்ள இந்திய மாநிலம்
இந்த நிலையில் தான், அமெரிக்காவுக்கு (America) இணையாக இந்தியாவின் ஒரு மாநிலம் தங்கத்தை வைத்துள்ளது. அந்த மாநிலத்தை தான் இந்தியாவில் கோல்டு கேப்பிடல் (Gold Capital of India) என்று அழைக்கிறோம். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு இணையாக தங்கம் வைத்துள்ள அந்த இந்திய மாநிலம் எது, அங்குள்ள எவ்வளவு தங்கம் உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : மகளிருக்கு விரைவில் மாதம் ரூ.2,500.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!




இந்தியாவின் கோல்டு கேப்பிடல் எது?
அதாவது அமெரிக்காவுக்கு இணையாக தங்கம் வைத்துள்ள இந்திய மாநிலம் தமிழ்நாடு தான். அமெரிக்காவின் மொத்த தங்க இருப்புக்கு இணையாக தமிழ்நாட்டு மக்கள் தங்கம் வைத்துள்ளனர். இந்திய மக்கள் தொகையில் வெறும் 5.5 சதவீதமாக இருக்கும் தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த தங்க இருப்பில் சுமார் 30 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : ஹெல்த் இன்சூரன்ஸ்: உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஆர்பிஐயை விட அதிக தங்கத்தை வைத்துள்ள மக்கள்
உலகின் எந்த நாட்டிலும் அந்த நட்டின் மத்திய வங்கியை விட அந்த நாட்டு மக்கள் அதிக தங்கத்தை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் தான் இது சாத்தியமாகும். காரணம், இந்தியர்கள் இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளதை விட அதிக தங்கத்தை வைத்துள்ளனர். இந்திய பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட சேமிப்பாக சுமார் 25000 முதல் 35000 டன் வரை தங்கத்தை வைத்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
அதிலும் குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் வெறும் 5.5 சதவீதமாக உள்ள தமிழ்நாட்டு மக்களின் வசம் மட்டும் சுமார் 7000 டன் தங்கம் உள்ளது. இதன் காரணமாக தான் தமிழ்நாடு, இந்தியாவில் கோல்டு கேப்பிடல் என்று அழைப்படுகிறது குறிப்பிடத்தக்கது.