மகளிருக்கு விரைவில் மாதம் ரூ.2,500.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
When Will Tamil Nadu Woman Get 2500 Rupees | தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் உள்ள நிலையில், மகளிருக்கு எப்போது ரூ.2,500 வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், 2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vettri Kazhagam) ஆட்சிக்கு வந்தால் மகளிரிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டது. அதேபோல, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியையும் பிடித்துள்ளது.
இருப்பினும் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ.2,500 இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. ரூ.2,500 எப்போது முதல் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் அது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மகளிருக்கு ரூ.2,500 எப்போது – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ரூ.2,500 மாண்புமிகு மகளிர் திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜூலை 31-க்குள் இதை செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம்.. கவணத்தில் கொள்ளுங்கள்!
அனைத்து நடவடிக்கைகளும் தீவிரம் – அமைச்சர்
தேர்தல் களத்தில் பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் தங்கள் அரசின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கண்டிப்பாக பெண்களுக்கு இந்த தொகை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : EPFO இணையதளத்தில் இனி இந்த சேவைகள் கிடைக்காது.. வேறு என்ன செய்வது?
முன்னதாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற சி.ஜோசப் விஜய், தமிழகத்தின் நிதி நிலமை சீராக இல்லை என்றும், ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத் தொகை பெண்களுன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் இந்த தகவலின் படி, விரைவில் மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.