AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EMI-ல் இருந்து வெளியே வர முடியவில்லையா?.. இந்த சில விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

Overcome EMI With These Simple Financial Tips | மாத தவணை என்ற வலையில் சிக்கி பலரும் தங்களது பொருளாதாரத்தை இழக்கின்றனர். இந்த நிலையில், மாத தவணை வலையில் இருந்து மீண்டு பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

EMI-ல் இருந்து வெளியே வர முடியவில்லையா?.. இந்த சில விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Jul 2026 19:44 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் மாத தவணை செலுத்தாத நபர்களை பார்க்கவே முடியாது. பலரும் ஏதேனும் ஒரு தேவைக்காக மாத தவணை செலுத்துகின்றனர். பொருளை முன்னதாகவே வாங்கிக்கொள்ளலாம், அதற்கான பணத்தை மெதுவாக மாதம் மாதம் சிறு சிறு தொகையாக செலுத்தலாம் என்ற ஆப்ஷன் உள்ளதன் காரணமாக பலரும் மாத தவணை முறையை தேர்வு செய்கின்றனர். அதிலும் குறிப்பாக பகுதி அளவு பணத்தை மாதம் மாதம் செலுத்தினால் போதும் என்பதால் பலரும் தங்களுக்கு தேவை இல்லாத பொருட்களை கூட மாத தவணை முறையில் வாங்கிவிட்டு இஎம்ஐ (EMI – Every Month Installment) வலையில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், இந்த மாத தவணை வலையில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாதுகாப்பான நிதி திட்டமிடல் செய்ய வேண்டும்

ஒவ்வொருவரும் தங்களது நிதி மேலாண்மையை மேம்படுத்த சில முக்கிய விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒன்றுதான், ஒட்டுமொத்த கடன் வரம்பை சுமார் 30 சதவீதத்திற்கு மேல் வைத்துக்கொள்ளாமல் இருப்பது. அடுத்ததாக நீங்கள் வாங்கும் ஆடம்பர பொருட்கள் உங்களுக்கு வருமானத்தை தருகிறதா அல்லது கடன் சுமையை தருகிறதா என்பது குறித்து ஆராய வேண்டும். ஒரு பொருளை மாத தவணை முறையில் வாங்குவதற்கு முன்னதாக இதனை யோசிக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : தங்கத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. கை நிறைய லாபத்தை அள்ளலாம்.. கோட்டக் செக்யூரிட்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!

மாத தவணை வலையில் இருந்து வெளியே வர சில வழிகள்

ஒருவேளை நீங்கள் ஆபத்தான இந்த மாத தவணை வலையில் சிக்கியிருந்தால் அதில் இருந்து மீண்டு வர சில வழிகள் உள்ளன.

  • அதிக வட்டி செலுத்தும் கிரெடிட் கார்டு கடன்களை அடைக்க, குறைந்த வட்டி கொண்ட வீட்டு கடன் போன்ற டாப்பப்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • அதிக வட்டி கொண்ட கடன்களை விரைவாக அடைத்து முடித்துவிட்டு பிறகு குறைந்த வட்டி கொண்ட கடன்களில் கவனம் செலுத்தலாம்.
  • இதேபோல சிறிய தொகை கொண்ட கடன்களை அடைத்து முடித்துவிட்டு, அதிக தொகை கொண்ட கடன்களில் முதன்மையாக கவனம் செலுத்தலாம்.

இதையும் படிங்க : 7 நாட்களுக்கு மேலாக முடக்கப்பட்ட EPFO இணையதளம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. முக்கிய தகவல்!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் வெளியே வர முடியாமல் தவிக்கும் மாத தவணை வலையில் இருந்து மீண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us