வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!
Income Tax Benefits For Buying New Car | ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மதிப்புக்கொண்ட புதிய கார் வாங்கி, வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த காருக்கு பிடித்தம் செய்யப்பட்ட டிசிஎஸ் தொகையை டேக்ஸ் ரீஃபண்டாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டினால் அந்த நபர் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் மாதமே பலரும் தங்களது வருமான வரி தாக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கி விடுவர். காரணம், ஜூலை 31, 2026-க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வருமான வரியை தாக்கல் செய்யும்போது அனைத்து விவரங்களும், ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அரசே நமக்கு பணம் வழங்கும். இந்த நிலையில், கார் வாங்கும் நபர்களுக்கு அரசு வழங்கும் ஒரு சலுகை குறித்து விரிவாக பார்க்கலாம்.
கார் வாங்குபவர்களுக்கு சலுகை வழங்கும் அரசு
சமீப காலமாகவே இந்தியர்கள் மத்தியில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு பரவலாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது. அத்தகையவர்களுக்காகவே மத்திய அரசு ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. அதாவது, ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யக்கூடிய ஆண்டில், புதியதாக கார் வாங்கியிருந்தார் என்றால் அவருக்கு அரசே ரூ.10,000 வழங்குகிறது.
இதையும் படிங்க : ஆதாரில் இலவசமாக Email Id-ஐ மாற்றம் செய்யலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. என்ன?
கார் வாங்குபவர்களுக்கு ரூ.10,000 சலுகை வழங்கும் அரசு
இந்தியாவை பொருத்தவரை கார் வாங்கும்போது அதில் 1 சதவீதம் டிசிஎஸ் (TCS – Tax Collected At Source) பிடித்தம் செய்யப்படும். கார் விற்பனை செய்யும் நிறுவனமே இந்த பணத்தை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் வழங்கும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை கண்காணிப்பது, சட்டவிநோத பண பரிவர்த்தனைகளை தடுப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இவ்வாறு ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புக்கொண்ட கார்களை வாங்கும்போது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Gold Price : ரூ.800 விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!
இந்த நிலையில், ரூ.10 லட்சம் மதிப்பிலான காரை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் உங்களிடம் இருந்து ரூ.10,000 வரியாக பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையை தான் அரசு டேக்ஸ் ரீஃபண்டாக (Tax Refund) வழங்குகிறது. இல்லை நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்றால் அதில் பிடித்தம் செய்யப்படும். பொதுமக்கள் கார் வாங்கும்போது, டீலரிடம் இருந்து 27டி படிவத்தை வாங்க வேண்டும். இந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆண்டு அறிக்கையை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
அதில் டிசிஎஸ் விவரம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் டிசிஎஸ் தொகை இருக்கும் பட்சத்தில் ரீஃபண்ட் கோரி வருமானவரித்துறையிடம் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



