AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ரூ.800 விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!

Gold Price Reduced In Chennai | ஈரான் போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : ரூ.800 விலை குறைந்த தங்கம்.. ஒரு கிராம் எவ்வளவு?.. இன்றைய விலை நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2026 10:25 AM IST

சென்னை, ஜூலை 01 : ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கியது முதலே தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம், இன்று (ஜூலை 01, 2026) மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் மாதம் முழுவதும் கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை

2026, பிப்ரவரி மாதம் முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் போர் நிலவி வந்தது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிவை சந்தித்த தொடங்கியது. உதாரணமாக, ஜனவரி மாதம் ரூ.15,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us