AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ.. இவர்களுக்கெல்லாம் சிக்கல்.. கட்டாயன் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Reserve Bank Of India Repo Rate Hike | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், இதனால் யார் யாருக்கு சிக்கல் என்பது குறித்து பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ.. இவர்களுக்கெல்லாம் சிக்கல்.. கட்டாயன் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Oct 2026 15:39 PM IST

இந்திய ரிசர்வ வங்கி (RBI – Reserve Bank Of India) தனது ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ-ன் நாணய கொள்கை குழு கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ஆர்பிஐ-ன் இந்த நடவடிக்கை மூலம் என்ன என்ன மாற்றங்கள் நிகழ உள்ளது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் மாத தவணை அதிகரிக்க உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதத்திற்கான தனது நாணய கொள்கை குழு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அக்டோபர் 05, 2026 அன்று தொடங்கிய இந்த கூட்டம், இன்று (அக்டோபர் 07, 2026) உடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், கூட்டத்தின் இறுதி நாளான இன்று, ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி 5.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : எல்ஐசி பாலிசி மீது கடன் – வாடிக்கையாளரிடம் சொல்லாமல் வங்கி பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?

ரெப்போ வட்டி உயர்வுக்கு காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றம் செய்யாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போது, ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, எல்பிஜி விலை உயர்வு, விநியோகம் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : ஆதார் பெயர் திருத்தம், மாற்றம்.. விதிகளில் முக்கிய மாற்றம் செய்த UIDAI.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

யாருக்கெல்லாம் சிக்கல்?

இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுள்ளதன் காரணமாக, பல்வேறு தரப்பினர் சிக்கல்களை எதிர்க்கொள்ள உள்ளனர். அதாவது வீட்டுக் கடன், தனிநபர் கடன் வாங்கியவர்களை இந்த மாற்றம் பாதிக்க கூடும். குறிப்பாக Floating Rate எனப்படும் மாறிக்கொண்டே இருக்கும் வட்டி முறையில் கடன்களை பெற்றவர்களுக்கு, ரெப்போ வட்டி உயர்வை பொறுத்து வட்டியில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக அவர்கள் வழக்கத்தை விட கூடுதலாக மாத தவணை செலுத்த வேண்டிய சூழலும் உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us