AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சம்பளத்தில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Smart Salary Management | அன்றாட பண தேவைகளுக்காக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பலரும் நிதி சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில், சம்பாதிக்கும் பணத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Oct 2026 11:52 AM IST
தங்களது அன்றாட வாழ்வின் நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலரும் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், பணம் சம்பாதிக்கும் பலரும் பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் தான், சம்பளத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய சில முக்கிய முயற்சிகள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது. 

1 / 5
காலவரையறையுள்ள ஆயுள் காப்பீட்டுத் திட்டம் : சம்பாதிக்கும் நபர் திடீரென உயிரிழந்துவிட்டால் அந்த குடும்பம் நிதி சுமைகளில் சிக்கிக்கொள்ளாமல் இந்த திட்டம் பாதுகாக்கும். எனவே, உங்களை நம்பியுள்ள உங்களது குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் இல்லாதபோதும் நிதி பாதுகாப்புடன் இருக்க சம்பளத்தை போல 20 முதல் 25 மடங்கு கால வரையறை உள்ள காப்பீட்டை தேர்வு செய்வது நல்லது.

2 / 5
மருத்துவ காப்பீடு : ஒவ்வொரு ஆண்டும் மருத்துவதத்திற்கான பணவீக்கம்  14 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆக்கோ இந்தியா மருத்துவ காப்பீடு குறியீடு 2024 தெரிவித்துள்ளது. எனவே, எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மருத்துவ செலவுகளை கடன் வாங்கி செலவு செய்யாமல் நிதி சிக்கலை தவிர்க்க முடியும்.

3 / 5
அவசரகால நிதியை உருவாக்குவது : பலரும் வேலைக்கு செல்கிறோம், சம்பாதிக்கிறோம் அதனை வைத்து நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால், எப்போது வேண்டுமானாலும் பணி இழப்பு ஏற்பட்டு சம்பளம் பெற முடியாத சூழல் உருவாகும். இத்தகைய சூழலில் தான் உங்களுக்கு அவசரகால நிதி கைகொடுக்கும்.

4 / 5
நிதி குறிக்கோள்களை வரிசைப்படுத்த வேண்டும் : உங்களுக்கு நிதி தேவைகள் இருந்தால் அதனை வரிசைப்படுத்த வேண்டும். அதாவது 5 ஆண்டுகளுக்குள்ளான தேவையை குறுகிய கால தேவையாகவும், 10 ஆண்டுகள் வரையிலான தேவையை நடுத்தர தேவையாகவும், 10 வருடங்களுக்கு மேலானவையை நீண்டகால தேவையாக கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.

5 / 5
Follow Us