பொருளாதாரம் சரிந்தால் பணத்தின் மதிப்பு என்ன ஆகும்? – ராபர்ட் கியோசாகி எச்சரிக்கை
Robert Kiyosaki Economical Advice: அமெரிக்க மத்திய வங்கி மற்றும் அரசு வரி, பணவீக்கம் உள்ளிட்ட வழிகளில் மக்களின் செல்வத்தின் மதிப்பை பாதிப்பதாகவும் கியோசாகி தெரிவித்துள்ளார். அரசால் அச்சிட முடியாத சொத்துகளை வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கருத்துகளை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் கியோசாகியின் இந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.
அக்டோபர் 5, 2026: ‘ரிச் டாட் பூர் டாட்’ புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் முதலீடு தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில், தன்னை ஒரு “Prepper” எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தங்கம், வெள்ளி அல்லது பிட்காயின் போன்ற சொத்துகள் கைவசம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
“Prepper என்றால் எதிர்மறையான சிந்தனையா?”
தான் ஏன் Prepper ஆக இருக்கிறேன் என்பதை விளக்கிய கியோசாகி, சில நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினருடன் பேசியபோது இதுகுறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு பெண், “Prepper ஆக இருப்பது எதிர்மறையான சிந்தனை இல்லையா? நேர்மறையாக சிந்திப்பது சிறந்ததல்லவா?” என கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த கியோசாகி, அந்த பெண்ணிடம் காருக்கு காப்பீடு வைத்திருக்கிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆம் என பதிலளித்துள்ளார். “விபத்து ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் காப்பீடு செய்கிறீர்களா?” என கியோசாகி கேட்டபோது, விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்கவே காப்பீடு செய்வதாக அந்த பெண் கூறியுள்ளார்.
பொருளாதார சரிவு ஏற்பட்டால் என்ன ஆகும்?
தொடர்ந்து, “உங்களிடம் தங்கம், வெள்ளி அல்லது பிட்காயின் உள்ளதா?” என கியோசாகி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் இல்லை என பதிலளித்ததாக அவர் கூறியுள்ளார். பொருளாதாரம் சரிந்தால் பணத்தின் மதிப்பு என்னவாகும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அரசு அதிக பணத்தை அச்சடிக்கும் என அந்த பெண் பதிலளித்ததாக கியோசாகி தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கமளித்த அவர், பணப்புழக்கம் அதிகரித்தால் பணத்தின் வாங்கும் திறன் குறையும் என்றும், இதையே பணவீக்கம் என்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
அமெரிக்க மத்திய வங்கி மற்றும் அரசு வரி, பணவீக்கம் உள்ளிட்ட வழிகளில் மக்களின் செல்வத்தின் மதிப்பை பாதிப்பதாகவும் கியோசாகி தெரிவித்துள்ளார். அரசால் அச்சிட முடியாத சொத்துகளை வைத்திருக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கருத்துகளை அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் கியோசாகியின் இந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.