AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Fixed Deposit Rules Changed | பொதுமக்கள் முதலீடு செய்ய சிறந்ததாக உள்ள திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Oct 2026 16:27 PM IST

சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு முதன்மை தேர்வாக உள்ளது தான் நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும் என்பதால், பலரும் இந்த திட்டத்தில் ஆர்வமாக முதலீடு செய்வர். இந்த நிலையில் தான், நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக இந்த விதிகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

நிலையான வைப்பு நிதி திட்டம் – விதிகளில் மாற்றம்

நிலையான வைப்பு நிதி மற்றும் மொத்த வைப்புத்தொகை ஆகியவற்றுக்கான விதிகளில் இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 01, 2026 முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய திருத்தத்தின் கீழ் வரும் மூன்று முக்கிய மாற்றங்கள் வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி அமைப்புகளுக்கும் பொருந்தும்.

இதையும் படிங்க : டிசம்பர் மாதத்திற்குள் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?.. ஐசிஐசிஐ முக்கிய கணிப்பு!

அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான வட்டி விகிதம்

ஒரே கால அளவை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் வெவ்வேறு விதமான வட்டி விகிதம் கடைபிடிக்கப்படுவதை தடுக்க முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான வட்டி விகிதம் தான் பின்பற்றப்பட வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.

இதையும் படிங்க : அன்று டெலிவரி ஊழியர்.. இன்று நிறுவனங்களின் தலைவர்.. பெங்களூரு இளைஞரின் வெற்றிக் கதை!

காலை 10 மணிக்கு வட்டி விகிதங்கள் வெளியிடப்பட வேண்டும்

ஒரே நிலையான வைப்பு நிதி கணக்கில் ரூ.3 கோடி அல்லது அதற்கும் மேல் வைக்கப்படும் இருப்பை மொத்த வைப்பு தொகை என வங்கிகள் கணக்கில் கொள்கின்றன. இந்த நிலையில் தான், இந்த மொத்த வைப்பு தொகை திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் காலை 10 மணி அளவில் தங்களது அதிகாரப்ப்பூர்வ இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

Follow Us