அன்று டெலிவரி ஊழியர்.. இன்று நிறுவனங்களின் தலைவர்.. பெங்களூரு இளைஞரின் வெற்றிக் கதை!
Swiggy Delivery Executive to Entrepreneur | வாழ்க்கையில் பூஜியத்தில் இருந்து பெரிய அளவில் சாதனை படைப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமானதாக உள்ளது. காரணம், அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் உறுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் டெலிவரி ஊழியராக இருந்து பிறகு நிறுவனங்களின் தலைவராக மாறியுள்ளார்.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளும் போட்டி மயமாக மாறியுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளில் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள் படித்த படிப்புக்கு முறையான வேலை கிடைக்காமல் ஏதேனும் ஒரு வேலையை செய்து தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாறு ஏராளமான இளைஞர்களுக்கு கை கொடுத்த வேலை தான் டெலிவரி ஊழியராக பணியாற்றுவது. ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஏராளமான இளைஞர்கள் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், டெலிவரி ஊழியராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் தற்போது இரண்டு நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார். அவர் யார், என்ன செய்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரி ஊழியர் முதல் சுயதொழில் வரை
பெங்களூரை சேர்ந்தவர் கௌஷிக் கார்வி, தற்போது இரண்டு தொழில்களை நடத்தி வரும் வளர்ந்துவரும் தொழிலதிபராக உள்ளார். ஆனால், அவர் தனது கடந்த கால கடினமான பக்கங்கள் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். கௌஷிக், பெங்களூரில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் கணினி அறிவியல் படித்துள்ளார். இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணியில் சேர்ந்துள்ளார். அதற்கும், தற்போதுள்ள தனது வாழ்க்கைக்குமான இடைவெளி குறித்தும், மாற்றங்கள் குறித்து அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் இவ்வளவு தானா?
நண்பர்களை பார்த்தால் ஓடி ஒளிந்துக்கொள்வேன்
நீண்ட நேரம் வேலைப்பார்ப்பது கடினமாக இருந்தாலும், எனது நண்பர்களை பார்த்தால் ஓடி ஒளிந்துக்கொள்வேன். எனது நண்பர்கள் என்னை வெறும் டெலிவரி பாயாக மட்டுமே பார்த்துவிடுவார்களோ என்ற கூச்சத்தில் அவ்வாறு செய்வேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு நண்பர்களை பார்த்தாலே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நிலையில் இருந்த அந்த இளைஞர் தற்போது பெங்களூரின் பிரபலமான சுயதொழில் முனைவராக உருவெடுத்துள்ளார். இவர் “Mangalore In Bangalore” என்ற பிரபல உணவகத்தை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க : கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?
தனது உணவகத்தை தாண்டி, கடல் உணவு வணிகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனத்தையும் அவர் கட்டமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.