AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?

Lower Berth Booking Guide : ரயிலில் பயணிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்காக ரயில்வே நிர்வாகம் தனியாக லோயர் பெர்த் ஒதுக்கீட்டை பிரத்யேகமாக வழங்குகிறது ஆனால் இந்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. இந்த கட்டுரையில் ரயில் பயணத்தின்போது லோயர் பெர்த் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Sep 2026 19:01 PM IST

ரயிலில் பயணிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்காக ரயில்வே நிர்வாகம் தனியாக லோயர் பெர்த் ஒதுக்கீட்டை பிரத்யேகமாக வழங்குகிறது ஆனால் இந்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது மேல் அல்லது நடு பெர்த் ஒதுக்கப்பட்டு, பயணம் முழுவதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா ?

கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் பயணிப்பது நல்லதல்லை என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இருந்தாலும், தவிர்க்க முடியாத நேரங்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள், சாலைப் பயணத்தின் சிரமங்களையும் தவிர்க்கப் பெரும்பாலும் ரயிலில் பயணிக்க விரும்பிகிறார்கள். அப்படி கர்ப்பிணிகள் பகல் நேரப் பயணத்தை ஓரளவு சமாளித்துவிடலாம். ஆனால் இரவுப் பயணத்தில் லோயர் பெர்த் கிடைக்காவிட்டால் பெரும் சிரமம்தான்.

இதையும் படிக்க : வருகிற செப்.30 தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் – காரணம் என்ன?

இந்தப் பிரச்னை சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வரை எதிரொலித்தது. கர்ப்பிணிப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகள் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கர்ப்பிணிகளுக்கான லோயர் பெர்த் ஒதுக்கீட்டு இருக்கைகளை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வழியாக ஏன் நேரடியாகத் தேர்வு செய்ய முடிவதில்லை என்று மத்திய அரசும் ரயில்வே அமைச்சகமும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

லோயர் பெர்த் பெறுவது எப்படி?

தற்போதைய நடைமுறைப்படி, கர்ப்பிணி பெண்கள் லோயர் பெர்த் பெற ரயில் நிலைய முன்பதிவு மையத்துக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் பெற்ற மருத்துவச் சான்றிதழை உடன் கொண்டு செல்ல வேண்டும். அதில், கர்ப்பமாக இருப்பது மற்றும் பயணம் செய்யும் உடல்தகுதி இருப்பது ஆகிய இரண்டும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். முன்பதிவுப் படிவத்தை நிரப்பும்போது, இருக்கை விருப்பத்தில் ‘லோயர் பெர்த்’ என்பதைத் தேர்வு செய்து, மருத்துவச் சான்றிதழை அதனுடன் இணைக்க வேண்டும்.

இதையும் படிக்க : பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்.. மாணவியிடம் இப்படி பேசலாமா? பதிவாளர் எடுத்த கடும் நடவடிக்கை!

ஸ்லீப்பர் வகுப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 6 முதல் 7 லோயர் பெர்த்கள், மூத்த குடிமக்கள், 45 வயதைக் கடந்த பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஏசி பெட்டிகளில் இவர்களுக்கு 4 அல்லது 5 லோயர் பெர்த்கள் ஒதுக்கப்படுகின்றன. முன்பதிவின்போது லோயர் பெர்த் கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். பயணத்தின்போது யாராவது டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது லோயர் பெர்த் காலியாக இருந்தாலோ, அதைக் கர்ப்பிணிகள், முதியவர்கள் போன்ற தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கும் அதிகாரம் டிக்கெட் பரிசோதகருக்கு உண்டு. எனவே ரயிலில் ஏறியதும் டிக்கெட் பரிசோதகரை அணுகி, காலியான லோயர் பெர்த் இருக்கிறதா என்று கேட்கலாம்.

Follow Us