ஏசி, டிவி, வாஷிங் மெஷின் வாங்குற ப்ளான் இருக்கா? அக். 1 முதல் எகிறப்போகும் விலை.. என்ன காரணம்?
செம்பு, அலுமினியம், எஃகு மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் ரூபாய் உள்ளிட்ட நாணயங்களின் மாற்று மதிப்பு ஏற்ற இறக்கமும் நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 27, 2026: பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசி, எல்இடி டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்தப் பொருட்களின் விலை 8 சதவீதம் வரை உயரக்கூடும் என தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடுத்த சில மாதங்களில் வர உள்ளதால், இந்த காலகட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் நிறுவனங்கள் அதன் சுமையை நுகர்வோரிடம் மாற்றக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வே காரணம்:
செம்பு, அலுமினியம், எஃகு மற்றும் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் ரூபாய் உள்ளிட்ட நாணயங்களின் மாற்று மதிப்பு ஏற்ற இறக்கமும் நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: செம ஸ்ட்ராங்கா? 20 டன் கற்களை தாங்கிய டாடா ஏரிஸ் கார்.. கவனிக்க வேண்டியது என்ன?
இதன் காரணமாக முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ல் மூன்றாவது முறையாக உயரும் விலை:
2026-ம் ஆண்டில் இந்தத் துறையில் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் மூலப்பொருள் செலவுகள் காரணமாக மேலும் விலை திருத்தம் செய்வது தவிர்க்க முடியாததாக இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
அக்டோபர் 1 முதல் குவிக் காமர்ஸ் விதிகள்:
இதனிடையே, அக்டோபர் 1 முதல் குவிக் காமர்ஸ் நிறுவனங்களும் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட நாடு உள்ளிட்ட விவரங்களை செயலிகளில் குறிப்பிட வேண்டும். மேலும், அக்டோபர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் மானியம் பெற ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாகும். சிலிண்டர் விநியோகத்தின் போது, விநியோகஸ்தர் அலுவலகத்தில் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் செயலிகள் மூலம் இந்த சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.