செல்வமகள் சேமிப்பு திட்டம்.. ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Sukanya Samriddhi Yojana Return Calculation | அஞ்சலகங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு என செயல்படுத்தப்படும் ஒரு சிறப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. இந்த திட்டத்தில் மாதம் ரூ.1,500 முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் என பார்க்கலாம்.
வருங்கால பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) செய்ய அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY – Sukanya Samriddhi Yojana Scheme). இந்த திட்டம் முற்றிலும் பெண் குழந்தைகளுக்கானது ஆகும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் ரூ.1,500 முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் தரும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தும் பிரத்யேக திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளின் பெயர்களில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போதே கணக்கு தொடங்கி முதலீடு செய்யும் பட்சத்தில், அவர்களின் எதிர்காலம் நிதி பாதுகாப்பு மிக்கதாக மாறும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
இதையும் படிங்க : EPFO : பிஎஃப் கணக்கில் நாமினியை நியமிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?.. பணம் அரசுக்கு சென்றுவிடுமா?
ரூ.1,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளின் 15 வயது வரை முதலீடு செய்தால் போது. அதன் பிறகு 6 ஆண்டிகள் அப்படியே அந்த முதலீட்டை வைத்துவிட வேண்டும். பிறகு, 6 ஆண்டுகள் கழித்து அதாவது 21வது வயதில் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதலீடு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதில் மாதம் ரூ.1,500 என ஒரு ஆண்டுக்கு ரூ.18,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.2.70 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 21 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் வட்டி மட்டுமே ரூ.5,61,917 வரும். இந்த நிலையில், முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.8,31,917 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



