குடும்பத்துக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போகிறீர்களா? இந்த 4 மாடல்களை பாருங்க !
Top 4 New Family Electric Scooters : பெட்ரோல் விலை உயர்வு, தினசரி பயணச் செலவு என பல காரணங்களால் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய குடும்பங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல் விலை உயர்வு, தினசரி பயணச் செலவு என பல காரணங்களால் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய குடும்பங்களை குறிவைத்து முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்திய குடும்பங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் ஏதர் கொனார்க், ஹோண்டா QC3, சிம்பிள் வேவ், டிவிஎஸ் ஐகியூப் மில்லியன்ஆர் ஆகிய 4 புதிய மாடல்களின் விலை, ரேஞ்ச், சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
ஏதர் கொனார்க்
ஏதர் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் கொனார்க். ஏதர் 450, ரிஸ்டா போன்ற பிரபலமான மாடல்களின் வரிசையில் இது மார்கெட்டுக்கு வந்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை செல்லும் என்பது இதன் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், கொனார்க் எஸ், கொனார்க் இசட் என இரண்டு வேரியன்ட்களில் இந்த ஸ்கூட்டர் வருகிறது. இதில் தற்போது கொனார்க் எஸ் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இதில் 100 கி.மீ., 125 கி.மீ., 161 கி.மீ., 200 கி.மீ என நான்கு ரேஞ்ச் தேர்வுகள் உள்ளன. அடிப்படை மாடலின் விலை 99,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!




டிவிஎஸ் ஐக்யூப் மில்லியன் ஆர்
ஐக்யூப் ஸ்கூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டதைக் கொண்டாடும் வகையில் டிவிஎஸ் இந்த சிறப்புப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3.5 கிலோ வாட்ஸ் பேட்டரி வேரியன்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,40,138 என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மார்கெட்டில் உள்ள மாடலுடன் ஒப்பிடும்போது புதிய வண்ண வடிவமைப்பும் சில கூடுதல் மேம்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஹோண்டா QC3
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாடல் QC3. இந்தியாவில் ஹோண்டாவின் 3வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. ஏற்கெனவே ஆக்டிவா e, QC1 ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளன. QC3ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.35 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. முழு சார்ஜில் 145 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் வட்டி உயருகிறதா?.. ஆர்பிஐ கையில் இருக்கும் முக்கிய முடிவு!
சிம்பிள் வேவ்
இந்தப் பட்டியலில் அதிக ரேஞ்ச் தருவது சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் வேவ் ஸ்கூட்டர்தான். இந்திய குடும்பங்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட இதன் ஆரம்ப விலை ரூ.1.10 லட்சம். இந்த பைக் சிம்பிள் வேவ் S, சிம்பிள் வேவ், சிம்பிள் வேவ் பிளஸ் என மூன்று வேரியன்ட்களில், மொத்தம் ஆறு விதமான கான்ஃபிகரேஷன்களில் இது கிடைக்கிறது. இதில் டாப் வேரியன்டான சிம்பிள் வேவ் பிளஸ், முழு சார்ஜில் 243 கி.மீ. வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.