AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Tamil Nadu Ration Card Special Camp | இந்தியாவில் ரேஷன் கார்டு பயன்படுத்தும் பொதுமக்கள் , ஆதார் அடிப்படையிலான சரிப்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்காக இன்று தமிழகத்தில் சிறப்பு ரேஷன் கார்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று சிறப்பு ரேஷன் கார்டு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Sep 2026 08:06 AM IST

சென்னை, செப்டம்பர் 26 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (செப்டம்பர் 26, 2026) ரேஷன் கார்டு சிறப்பு முகாம் (Ration Card Special Camp) நடைபெற உள்ளது. ரேஷன் கார்டில் கை விரல் ரேகை பதிவு உள்ளிட்ட சேவைகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த சிறப்பு ரேஷன் கார்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறும் ரேஷன் கார்டு முகாம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் விவரங்களை சரிப்பார்க்க மத்திய அரசு எடுத்த முயற்சி

மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013-ன் படி, முன்னுரிமை மற்றும் அந்நியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் உள்ள ஆதார் விவரங்களை சரிப்பார்க்கும் வகையில், இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மின்னனு குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளும் தங்களது கை விரல் ரேகை மூலம் இந்த சரிப்பார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க : வடபழனி – பூந்தமல்லி ரயில் சேவை – ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் விஜய்

96.21 சதவீதம் கை விரல் ரேகை சரிப்பார்ப்பு நிறைவு

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் இந்த கை விரல் ரேகை சரிப்பார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, அக்டோபர் 2023 முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தற்போது வரை சுமார் 96.21 சதவீத குடும்ப அட்டைகளில் இந்த கை விரல் ரேகை சரிப்பார்ப்பு முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், மீதமுள்ள குடும்ப அட்டைகளில் கை விரல் ரேகை சரிப்பார்ப்பை மேற்கொள்ள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிங்க : மேடையில் அந்நியன்.. களத்தில் அம்பி.. முதல்வர் விஜய்யின் ஆட்சியை பங்கம் செய்த மு.க.ஸ்டாலின்!

ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

ரேஷன் கார்டு பயனர்கள் 100 சதவீதம் தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்யும் வகையில் தான், இன்று இந்த ரேஷன் கார்டு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us