வடபழனி – பூந்தமல்லி ரயில் சேவை – ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் விஜய்
Chennai Metro Inauguration : பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் நாள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 11, 2026 அன்று பிரதமர் மோடி இந்த சேவையைத் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, செப்டம்பர் 25 : சென்னை மக்களால் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் நாள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 11, 2026 அன்று பிரதமர் மோடி இந்த சேவையைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும், முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடபழனி – பூந்தமல்லி ரயில் சேவையை துவங்கி வைக்கும் பிரதமர் மோடி
சென்னையில் 118.1 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. அதில் முதலில் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ மெட்ரோ ரயில்வே வழித்தடம் தயாராகி திறப்பு விழாவுக்காக தயாராகியுள்ளது. இதனால் சென்னையின் டிராஃபிக் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றாடம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வேலைக்கு செல்லும் மக்களுக்கு இந்த ரயில் சேவை பெரிதும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை




இந்த மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தும், திறப்பு விழா மட்டும் தள்ளிக்கொண்டே போனது. முதலில் கடந்த 2025 டிசம்பரில் திறக்கத் திட்டமிடப்பட்டது. பிறகு கடந்த 2026 மார்ச் என்று மாற்றப்பட்டது. ஆனால் சட்டமன்றத் தேர்தல், புதிய அரசு பதவியேற்பு என அரசியல் சூழல் மாறியதால், தேதி மீண்டும் தள்ளிப்போனது.
சுமார் 4 மாதங்களுக்கு முன்பே ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் இந்த வழித்தடத்துக்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்தது. மேலும் கடந்த மே, 2026ல் அனைத்து நிபந்தனைகளையும் மெட்ரோ நிறுவனம் பூர்த்தி செய்ததும், மெட்ரோ ரயில் சேவையை துவங்க இறுதி அனுமதியும் கிடைத்தது. இந்த திட்டத்தின் துவங்கி வைக்கப்படும் தேதியை முடிவு செய்யுமாறு மத்திய அரசிடம் மெட்ரோ நிர்வாகம் கோரிக்கை வைத்தது. எல்லாம் தயார், தேதிக்காகத்தான் காத்திருக்கிறோம் என்று அதிகாரிகளும் தொடர்ந்து கூறி வந்தனர்.
இந்த நிலையில்தான் அக்டோபர் 11 தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 11 நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். மீதமுள்ள 6 நிலையங்கள் பின்னர் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. துவக்க தேதி குறித்து மெட்ரோ நிர்வாகம் அல்லது அரசு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தவறான சிகிச்சை – தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை
இதற்கிடையே, சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளை முதல்வர் விஜய் கடந்த ஜூலை 30, 2026 அன்று நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடங்களின் பணிகளையும் தாமதமின்றி, குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11, 2026 அன்று பிரதமர் மோடி வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைப்பார் என்றும் அதில் முதல்வர் விஜய்யும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.