கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில்.. விரிவான அறிக்கை தயார் செய்ய டெண்டர் வெளியீடு..
ஏற்கனவே பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, எளிதாகச் சென்றடைய மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பிலும் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஜூலை 25, 2026: கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் சென்னை மெட்ரோ ரயிலில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரையில், இரண்டு கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டத்தில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் விம்கோ நகர் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள்:
அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும் என மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: சோலார் ஆலை அமைக்க எதிர்ப்பு.. நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகள் மீது பொதுமக்கள் கல்வீச்சு.. விருதுநகரில் பரபரப்பு!
ஏற்கனவே பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, எளிதாகச் சென்றடைய மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பிலும் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம்:
இதற்கிடையில், சென்னை மெட்ரோ முதல் கட்டத்தில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: “விழுப்புரம் போலீசுக்கு தனி அதிகாரமா?”.. கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம் கொந்தளிப்பு! நீட் போராட்டக் கைதால் பரபரப்பு!
ஏற்கனவே விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்புக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், அடுத்த கட்டமாக இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.