தமிழக முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் புறப்பட்டார்… ஒரு வாரம் சுற்றுப்பயணம்.. ரூ. 8491 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டம்!
CM Vijay Left For London : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு, ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் இன்று வியாழக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு, பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் வருமாறு அழைப்பு விடுக்கிறார். இவருடன் பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். லண்டனில் சுமார் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான குழு செப்டம்பர் 17- ஆம் தேதி சென்னை திரும்புகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பை பார்வையிடுகிறார்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, பல்வேறு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் சில்வர் ஸ்டோன் மோட்டார் சேசிங் சர்க்யூட் மற்றும் உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஜோசப் விஜய் நேரில் பார்வையிட உள்ளார். அத்துடன் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க: ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?




பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக. . .
அதற்கான முதலீடுகளை ஏற்பதற்காகவும், புதிய முதலீடுகளை ஏற்ப்பதற்காகவும் பல்வேறு முதலீட்டாளர்களுடன் சந்திப்பு மேற்கொள்கிறார். வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொள்கிறார். பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதே முதல்வர் விஜயின் லண்டன் பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமான மூலம் லண்டன் புறப்பட்ட முதல்வர் விஜய்
முன்னதாக முதல்வர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து, பயணிகள் விமான மூலம் துபாய் புறப்பட்டார். அங்கு, முதல்வர் விஜய் மற்றொரு விமான மூலமாக லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு, பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கான ரூ. 8491 கோடி முதலீடுகளை ஈர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் ஏராளமான தவெகவினர் மற்றும் பொது மக்கள் கூடி இருந்தனர். அவர்களை பார்த்து முதல்வர் கையசைத்து விட்டு புறப்பட்டு சென்றார்.
மேலும் படிக்க: அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய் – அதிகாரப்பூர்வ தகவல்