ஆகாயத்தில் பறக்கும் ஆடம்பர சொர்க்கம்.. முதல்வர் விஜய் லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானம்.. என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?
CM Vijay Traveling Emirates Flight Features : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று இரவு லண்டன் புறப்பட்டு செல்லும் நிலையில், அவர் பயணிக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் உள்ள ஆடம்பரமான சொகுசு வசதிகள், சிறப்பம்பசங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை இருப்பதற்காக இன்று வியாழக்கிழமை இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று, அங்கிருந்து, மற்றொரு விமானத்தில் லண்டன் செல்கிறார். சென்னையில் இருந்து துபாய் வரை முதல்வர் விஜய் பயணிக்க இருப்பதாக கூறப்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஆடம்பர சொகுசு வசதிகளுக்கு பெயர் போனதாகும். இந்த விமான நிறுவனத்தில் பல்வேறு ஆடம்பர வசதிகள், சிறப்புகள் உள்ளன. துபாய் அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனமானது உலகிலேயே மிக மிக ஆடம்பர பயண அனுபவத்தை தரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த விமானத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: “அடிவாங்கிய தழும்பு இன்னமும் இருக்கிறது; வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!!
- விமானத்தில் தனக்கென பிரத்தியேக அறை போன்ற தனி வசதியை ஏற்படுத்த முடியும்.
- விமானத்தில் குளிப்பதற்கு ஷவர்- ஸ்பா வசதி.
- சொகுசு உணவக வசதி.
- பயணிகளுக்கு பிரீமியம் ரக ஆடம்பர சோப்புகள்- டவல்கள் வழங்கப்படும்.
- முதல் வகுப்பு பயணிகளுக்கு தின்பண்டங்கள், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்படும்.
- உலக தரம் வாய்ந்த செப்-களால் தயார் செய்யப்படும் பிரீமியம் உணவுகள் வழங்கப்படும்.
- மது பிரியர்களுக்கு ஒயின்கள் வழங்கப்படும்.
- விமான பயணிகளுக்கு இரவு நேர மென்மையான ஆடைகள், காலணிகள், முன்னணி நிறுவனத்தின் ஸ்கின் கேர் பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்படும்.
- முதல் வகுப்பு பயணிகளுக்கு பயணம் முழுவதும் அன்லிமிடெட் இலவச இன்டர்நெட் வசதி வழங்கப்படும்.
முதல் முறையாக பயணிகள் விமானத்தில் செல்லும் முதல்வர் விஜய்
தற்போது, முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொள்ள இருக்கும் விமானம் எந்த மாடலை சேர்ந்தது என்பதற்கு ஏற்ப அதில் உள்ள வசதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளன. பொதுவாக, முதல்வர் விஜய் தனி விமானங்களிலேயே பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது, முதல் முறையாக பயணிகள் விமானத்தில் லண்டன் செல்ல உள்ளார்.




செப்டம்பர் 17- இல் சென்னை திரும்புகிறார்
அங்கு சுமார் ஒரு வார காலம் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அத்துடன், லண்டன் வாழ் தமிழர்களையும் நேரில் சந்தித்து முதல்வர் விஜய் கலந்துரையாட இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 17- ஆம் தேதி மீண்டும் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சென்னை திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: “தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது” முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!