2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா? முதன்முறையாக மனம் திறந்த ரோகித்!
Rohit Sharma on 2027 World Cup : வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரோகித் சர்மா முதன்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரோகித் சர்மா முதன்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் 2027 உலகக் கோப்பையில் நீங்கள் விளையாடுவீர்களா? என்று ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.
2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, 2027 அக்டோபர் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. அப்போது அதைப் பற்றி பார்ப்போம் என்று பதிலளித்துள்ளார். ரோகித்தின் இந்த பதில், அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தவில்லை. அதே நேரத்தில், உலகக் கோப்பை குறித்த தனது முடிவை அவர் தற்போது வெளிப்படையாக அறிவிக்கவும் இல்லை.
இதையும் படிக்க : Asia Cup 2026: பைனலுக்கு செல்லப்போவது யார்..? அரையிறுதியில் மோதும் இந்திய மகளிர் – வங்கதேச மகளிர்!




இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற தகவல்கள் பரவின. மேலும், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வில் ரோகித் இடம்பெறவில்லை என்றும், அவருக்குப் பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டுவர தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின
இதற்கிடையே, 2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற ஆசை ரோகித்துக்கு இருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டது. தனது உடற்தகுதியிலும் ரோகித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக 2025 ஆம் ஆண்டு முதல் தனது ஃபிட்னஸை மேம்படுத்துவதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் 2027 உலகக் கோப்பை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான இலக்காக பார்க்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. ரோகித் சர்மா ஏற்கனவே பல்வேறு சாதனைகளையும் முக்கிய வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய இலக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : VIDEO : 47 வயதில் கெத்து காட்டும் இம்ரான் தாஹிர்.. சிபிஎல் தொடரில் உலக சாதனை
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா அபாரமான சதம் அடித்தார். இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், ரோகித்தின் அந்த சதம் அவரது எதிர்காலம் குறித்த விவாதத்தை மேலும் அதிகரித்தது. இதற்கிடையே, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ரோகித் அந்தத் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறப் போவதில்லை என்று பொதுவெளியில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.