AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: ரோஹித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறி! பிசிசிஐ எப்போது முடிவு செய்யும்?

Rohit Sharma Future: 2027 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தேர்வாளர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் ரோஹித் சர்மாவின் வயதுதான். 2027 உலகக் கோப்பை வரும்போது, ​​ரோஹித்துக்கு 40 வயதைக் கடந்திருக்கும்.

Team India: ரோஹித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறி! பிசிசிஐ எப்போது முடிவு செய்யும்?
ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Sep 2026 17:25 PM IST

இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் எப்படி இருக்கும், மேலும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் இடம்பெறுவாரா? இந்தக் கேள்விக்கான பதில் இந்த 2026 செப்டம்பர் மாதம் தெரியவரலாம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி (Indian Cricket Team) தேர்வின் மூலம், ரோஹித் சர்மா விஷயத்தில் தேர்வாளர்கள் எந்தத் திசையில் செல்ல விரும்புகிறார்கள் என்பது மேலும் தெளிவாகத் தெரியவரும். தற்போது இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் விஷயம் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம்தான். சமீபத்தில் நடந்த பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவ்ஜித் சாய்கியா, ரோஹித் சர்மாவைச் சுற்றியுள்ள யூகங்களுக்கு பதிலளித்து, எந்த வதந்திகளுக்கும் தான் வலு சேர்க்க விரும்பவில்லை என்றும், ரோஹித்தின் தற்போதைய ஃபார்ம் மற்றும் அவரது சமீபத்திய சதம் குறித்தும் குறிப்பிட்டார்.

ALSO READ: ஆப்கானிஸ்தான் டி20 தொடர்! வைபவ்? சாம்சன்? இந்திய அணியின் தொடக்க வீரர் யார்?

ரோஹித் சர்மாவின் எதிர்காலம்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணித் தேர்வின் மீது தற்போது அனைவரின் கவனமும் உள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான அணி அறிவிப்பானது, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான தங்களது திட்டங்களில் தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவைக் கருத்தில் கொள்கிறார்களா என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

2027 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தேர்வாளர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் ரோஹித் சர்மாவின் வயதுதான். 2027 உலகக் கோப்பை வரும்போது, ​​ரோஹித்துக்கு 40 வயதைக் கடந்திருக்கும். இருப்பினும், ரோஹித் தனது பேட்டிங்கால் தேர்வாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் அவரால் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. அதேநேரத்தில், 3வது ஒருநாள் போட்டியில் ஒரு அற்புதமான சதத்தின் மூலம் ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பினார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை காத்திருக்கும் ரோஹித்:

ரோஹித் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவசரப்படவில்லை என்பதை இந்த ஆட்டம் நிச்சயமாகக் காட்டியது. இனி முடிவு தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது. அனுபவம் வாய்ந்த ரோஹித்தை 2027 உலகக் கோப்பை வரை அணியின் திட்டங்களில் வைத்திருப்பதா அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் பேட்ஸ்மேனுக்கு வருகின்ற 2027ம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி அவரை உலகக் கோப்பைக்குத் தயார்படுத்துவதா என்ற கேள்வியை எதிர்கொள்கின்றனர்.

ALSO READ: பும்ராவிற்கு காயம் சரியானதா..? சோதிக்கப்போகும் பிசிசிஐ!

வாரியத்திற்கும் தேர்வாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு:

ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து கடந்த சில காலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, ​​தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், ரோஹித்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவருக்கு ஒரு செய்தியைத் தெரிவித்ததாக சில ஊடக அறிக்கைகள் கூறின. இருப்பினும், இந்த அறிக்கைகளை பிசிசிஐ அல்லது தேர்வுக் குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Follow Us