ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு.. அதிமுக தரப்பில் அலங்காநல்லூரில் போராட்டம்..
ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ கருப்பையா பேசியதைக் கண்டித்து, அலங்காநல்லூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் ஜல்லிக்கட்டு விளையாட்டை சீரழிக்கும் வகையில் எம்எல்ஏ கருப்பையா கொச்சைப்படுத்திப் பேசியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்தப் போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செப்டம்பர் 3, 2026: ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ கருப்பையா பேசியதைக் கண்டித்து, அலங்காநல்லூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் ஜல்லிக்கட்டு விளையாட்டை சீரழிக்கும் வகையில் எம்எல்ஏ கருப்பையா கொச்சைப்படுத்திப் பேசியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்தப் போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் பாடிவாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எம்எல்ஏ கருப்பையாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அவரது பேச்சுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு கண்டனம் தெரிவிக்காதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அப்போதைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதேபோல், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
