பலரின் பொறுப்புகள் பறிக்கப்படும் – புதிய நிர்வாகிகளுக்கு மு.க ஸ்டாலின் அட்வைஸ்
திமுக 2.0-க்கான பயணத்தை தொடங்கியுள்ளதாகக் கூறிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கட்சியில் 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புப் பணிகளுக்காக தலைமைக்கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கிளை முதல் தலைமைக்கழகம் வரையிலான பதவிகளுக்கு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வயது வரம்பு உள்ளிட்ட காரணங்களால் சில நிர்வாகிகளின் பதவிகள் மாற்றப்படலாம் என்றும், அவர்களின் தகுதிக்கேற்ப வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூறினார். “மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம். கழகத்தை மறுசீரமைப்போம்; நீண்டு வருவோம்; மீண்டும் வெல்வோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.