கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழப்பு!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனம்பிக்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரி மீது மோதியது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனம்பிக்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரி மீது மோதியது. கார் முழுவதும் நொறுங்கியதால், தீயணைப்புத் துறையினர் வாகனத்தை வெட்டி உடல்களை மீட்டனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் சுமார் 20 வயதுடையவர்கள் என்றும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. விஷ்வா, சூர்யா, யுவ சஞ்சித், சந்தோஷ், பிரசன்னா உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடல்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
கோவை இஸ்கான் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜென்மாஷ்டமி
நாய்கள் செய்த அதிசயம்.. நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..
