AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவை இஸ்கான் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜென்மாஷ்டமி!

கோவை இஸ்கான் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜென்மாஷ்டமி!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Sep 2026 11:36 AM IST

கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் கிருஷ்ண நாமங்களைப் பாடியபடி சுவாமி தரிசனம் செய்தனர். பலராமர், சுபத்ரா மற்றும் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும், பக்தர்கள் “ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா” என்ற பக்தி முழக்கங்களுடன் கோவிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பலர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழைத்து வந்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை கலச அபிஷேகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

Follow Us