AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Bigg Boss Tamil Controversy: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் சர்ச்சைகளும்… முந்தைய சீசன்களின் ரீகேப் இதோ

Bigg Boss Tamil Controversy: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த 9 சீசன்களிலும் பல சர்ச்சைகள் நடைப்பெற்றுள்ள நிலையில் அவை என்ன என்ன என்பது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil Controversy: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் சர்ச்சைகளும்… முந்தைய சீசன்களின் ரீகேப் இதோ
பிக் பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2026 17:33 PM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கியது இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் தமிழ் நிகழ்ச்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுவரை மொத்தம் தமிழில் 9 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மேலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளை 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கியதில் இருந்து முதல் சீசன் முதல் கடந்த 9-வது சீசன் வரை பல சர்ச்சைக்குரிய விசயங்கள் தொடர்ந்து நடைப்பெற்று உள்ளது. இந்த 10-வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக அந்த நிகழ்வுகள் என்ன என்ன என்பது குறித்து ஒரு ரீகேப்பாக தற்போது பார்க்கலாம்.

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 1 தொடங்கிய போது போட்டியாளர் ஒருவரு வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து வேலிகளை தாண்டி வெளியே குதிக்க முற்பட்டது முதல் கடந்த 09வது சீசனில் சக போட்டியாளரை காயப்படுத்தியதற்காக மற்ற போட்டியாளர்கள் இரண்டு பேருக்கு ரெட்கார்ட் கொடுக்கப்பட்டது முதல் பல நிகழ்வுகள் உள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியும் சர்ச்சைகளும்:

பிக்பாஸ் தமிழ் சீசன் 1: நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய போது அந்த சீசனில் போட்டியாளராக இருந்த பரணி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் நிகழ்ச்சி குழு அதற்கு பதிலளிக்காமல் அமைதிகாத்த போது அவர் வீட்டைவிட்டு வெளியே குதிக்க பெரிய மதில் சுவர் மீது ஏறியது பரப்பரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆரவ் மீது ஓவியா காதலில் இருந்த அந்த காதலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீச்சல் குளத்தில் குதித்தார். அதுவும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2: இந்த இரண்டாவது சீசனில் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா மற்றொரு போட்டியாளர் தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து இருந்த தாடி பாலாஜி மற்றும் அவரது முன்னாள் மனைவி நித்யாவை ஒரே சீசனில் போட்டியாளராக போட்டது மிகப்பெரிய சர்ச்சையாக அமைந்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3: இந்த சீசனின் நடிகர் சரவணன் தான் கல்லூரியில் படிக்கும்போது பஸ்ஸில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து கூற அதற்காக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் போட்டியாளர் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4: இந்த சீசனில் பெரிய அளவில் சர்ச்சைகளாக எதுவும் வெடிக்கவில்லை என்றாலும் போட்டியாளர்கள் பாலா மற்றும் ஆரி இருவரும் ஒவ்வொரு முறையும் முறைத்துக்கொள்ளும் போது அடிதடி ஆகிவிடுமோ என்று பார்வையாளர்களை பதட்டத்திலேயே வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: இந்த சீசனில் திருமணமான அபிநய் பாவனியிடம் காதலில் இருப்பது போல காட்டியது சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து பாவனி அபியநியிடம் இருந்து விலகி இருந்ததால் அது பெரியதாக செல்லாமல் நின்றது. அதனைத் தொடர்ந்து ஒரு டாஸ்கில் தாமரை மற்றும் பிரியங்கா இருவரிடையே ஏற்பட்ட சண்டை கைகலப்பாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6: இந்த சீசனில் வெற்றியாளராக உள்ள அசீம் மற்ற போட்டியாளர்களிடையே நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களிடையே முகம் சுழிக்கும் விதமாக அமைந்தது. பலரும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் அவரே போட்டியில் வெற்றிப்பெற்றது சர்ச்சையை கிளப்பியது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7: இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி மீது மற்ற போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை சரியாக விசாரிக்காமல் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினார் தொகுப்பாளர் கமல் ஹாசன். இந்த நிகழ்விற்கு பிறகு கமல் ஹாசனை மக்கள் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாகவே அவர் அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

Also Read… ஐ அம் கேம் முதல் இம்மார்டல் வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த நிகழ்ச்சியில் தான் பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் நடக்காத ஒன்றாக ஆண்கள் VS பெண்கள் என்று போட்டி தொடங்கியது. இதில் தொகுப்பாளராக கமல் ஹாசனுக்கு பதிலாக வந்த விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே நேர்மையாக இல்லாமல் தொடர்ந்து அவர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்வதாக வைரலானது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: இந்த சீசனில் தான் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆம் சக போட்டியாளரை காயப்படுத்தியதற்காக போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்களே இறுதி நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் குழு அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read… மறக்க முடியாத பயணம்… கிடாரி படம் குறித்து நெகிழ்ந்த சசிகுமார்

Follow Us