மறக்க முடியாத பயணம்… கிடாரி படம் குறித்து நெகிழ்ந்த சசிகுமார்
10 Years Of Kidaari Movie | இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சசிகுமார் தனது நடிப்பில் வெளியான கிடாரி படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெறும் திரையுலக பிரபலமாக வலம் வருகிறார் சசிகுமார். இவர் சினிமாவில் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகின்றார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ள சசிகுமார் தொடர்ந்து நாயகனாக படங்களில் நடிப்பதிலேயே அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்த கிடாரி படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்து சசிகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த கிடாரி படம் கடந்த 2-ம் தேதி செப்டம்பர் மாதம் 2016-ம் ஆண்டு இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல், நெப்போலியன், வேல ராமமூர்த்தி, ஓ.ஏ.கே.சுந்தர், ஹரீஷ் பெராடி, சுஜா வருணி, ஷோபா மோகன், வசுமித்ரா, நாடோடிகள் கோபால், மு ராமசுவாமி, பாத்மென், ராம், தீபா சங்கர், தெனாலி, கே.என்.காளை மற்றும் ஆர்.எஸ்.சதீஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான் போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கிடாரி படம் குறித்து நெகிழ்ந்து பேசிய சசிகுமார்:
வேலா ராமமூர்த்தி மதுரை சாத்தூர் பகுதியில் உள்ள கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கிறார். அந்த ஊரிலேயே அனைத்து மக்களும் கட்டுப்படும் நபராக உள்ள வேலா ராமமூர்த்தியின் பலமாக அவருடனேயே இருக்கிறார் சசிக்குமார். இந்த நிலையில் வேலா ராமமூர்த்தி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார் என்று சசிக்குமார் தேடுவதே படத்தின் கதை.
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் குறித்து சசிகுமார் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிடாரியின் 10 ஆண்டுகள், அதன் இயல்பான ஆன்மா, மண்ணின் மைந்தர்களாக அமைந்த கதாபாத்திரங்கள், வலிமையான உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத பயணம் ஆகியவற்றுடன். உங்கள் அனைவருக்கும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… மனைவியை பிரியும் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி – வைரலாகும் பதிவு
சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
10 YEARS OF #KIDAARI
with its raw soul, rooted characters, powerful emotions, and unforgettable journey.
Thank you all for ur support #10YearsOfKidaari pic.twitter.com/XxrxaPlFHd— M.Sasikumar (@SasikumarDir) September 2, 2026
Also Read… என் பெயரை ராமலட்சுமணன் என்பதில் இருந்து மாற்ற ரஜினிகாந்த் தான் காரணம் – நடிகர் சூரி