என் பெயரை ராமலட்சுமணன் என்பதில் இருந்து மாற்ற ரஜினிகாந்த் தான் காரணம் – நடிகர் சூரி
Soori talks about Rajinikanth | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடிகர் சூரி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சூரி கடந்த 2024-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதி இருந்து இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி. இந்த நிலையில் நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




என் பெயரை மாற்ற ரஜினிகாந்த் தான் காரணம்:
அந்தப் பேட்டியில் தனது பெயரை மாற்ற என்ன காரணம் என்பதை அவர் பேசியுள்ளார். அதன்படி நடிகர் சூரி பேசியதாவது, ரஜினிகாந்தால் ஈர்க்கப்பட்டு, எனது பெயரை ராமலட்சுமணனிலிருந்து சூர்யா என்று மாற்றிக்கொண்டேன். இன்று நீங்கள் பார்க்கும் சூரி அந்த ஈர்ப்பின் விளைவாக உருவானவர்தான். சூர்யா என்ற பெயரைக் கொண்ட ஒரு ரசிகராக இருந்து, பின்னர் சூர்யாவாகவே சினிமாவுக்குள் நுழைந்து, இறுதியில் திரையுலகில் சூரியாக மாறினேன். நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகன் என்று நடிகர் சூரி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Soori About #Rajinikanth:
I changed my name from Ramalakshmanan to #Suriya after being inspired by him. The #Soori you see today came from that inspiration. From being a fan named Suriya, I entered cinema as Surya, and eventually became Soori in the film industry. I am an…
— Movie Tamil (@_MovieTamil) September 1, 2026
Also Read… Kavin: கவினின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!