AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ட்விட்டரில் வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்

GV Prakash About Trolls | பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் வரும் நெகட்டிவ் கருத்து மற்றும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ட்விட்டரில் வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2026 18:10 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தென்னிந்திய மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் பெருமபாலும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது இசையில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தென்னிந்திய சினிமாவில் இதுவரை மட்டும் சுமார் 9 படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அடுத்தடுத்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாக படங்கள் வரிசையாக காத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் அவ்வபோது தமிழ் சினிமாவில் படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக இம்மார்டல் என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு வருகின்ற செப்டம்பர் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு ஆகும். படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள ஜிவி பிரகாஷ் குமார் பேட்டி ஒன்றில் நெகட்டிவ் விமர்சனம் மற்றும் ட்ரோல்ஸ்கள் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய ஜிவி பிரகாஷ்:

வாய்க்கு வந்தபடி பேசுபவர்களை நாம் என்ன செய்ய முடியும்? ரஜினிகாந்த் சார் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டால், அதில் பல மோசமான கருத்துகளைப் பார்க்க முடிகிறது. இதனால் ரஜினி சாரது புகழோ அல்லது அந்தஸ்தோ குறைந்துவிடுமா? அது அவரைப் பாதிக்குமா? உங்கள் கருத்துகள் அவர்களின் உயரிய நிலையைச் சிறிதும் குறைத்துவிடாது. சூரியன் எப்போதும் சூரியனாகவே இருக்கும்.

எப்போதும் எதிர்மறையான கருத்துகளைப் பரப்புபவர்கள் மற்றும் பிறரைத் தாழ்த்திப் பேசுபவர்கள் மீதே உங்கள் கவனம் இருந்தால், நீங்களும் அந்த எதிர்மறைத் தன்மைக்குள் இழுக்கப்பட்டுவிடுவீர்கள். ‘அவன் அப்படிப் பேசுகிறான், இவன் இப்படிப் பேசுகிறான்’ என்று அதிலேயே மூழ்கியிருந்தால், வாழ்க்கையில் உங்களால் முன்னேற முடியாது.

ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கத்தக்கவை. ஆனால், அடையாளம் தெரியாத கணக்கின் (faceless account) பின்னால் ஒளிந்துகொண்டு, ஒரு நடிகரின் படத்தைப் பயன்படுத்தி, மோசமான கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் ஒருவித அதிகார உணர்வை அல்லது மேன்மையை அடைய நினைப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம். அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து வரும் இத்தகைய எதிர்மறைத் தன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அதற்கு இடம் கொடுத்தால், அது உங்களை நீங்களே பின்னுக்கு இழுத்துக்கொள்வதற்குச் சமம்.

Also Read… யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது தி பாரடைஸ் படத்தின் யேஷநகுலா பாடல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மார்க் ஆண்டனி படம் குறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கலகப்பாக பேசிய கார்த்தி – வைரலாகும் வீடியோ!

Follow Us