தி காமன் மேன் ஷோ மூலம் பிக் பாஸ் சீசன் 10ல் நுழையும் போட்டியாளர்கள் இவர்களா?
Bigg Boss Tamil S10: தமிழ் சின்னத்திரையில் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டுவரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் சீசன் 10 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு காமன் மேன் ஷோ மூலம் எந்தெந்த போட்டியாளர்கள் நுழைகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடத்தப்பட்டுவரும். அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது 2026ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை எதிர்பார்த்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 9 ஆண்டை கடந்துள்ளது. 2027ம் ஆண்டோடு இந்நிகழ்ச்சி தொடங்கி 10 வருடம் விரிவாக்கும்.
அந்த விதத்தில், 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கு, சாதாரண மக்களும், தி காமன் மேன் (BB -The Common Man) நிகழ்ச்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எந்தெந்த காமன் மேன் போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10ல் நுழைகிறார்கள் என விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் சிறப்பு நடனத்தில்.. நானியின் தி பாரடைஸ் பட ‘யேஷநகுலா’ பாடல் வெளியீடு!
பிக் பாஸ் சீசன் 10ல் நுழையும் தி காமன் மேன் நிகழ்ச்சி போட்டியாளர்கள் லிஸ்ட்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சீரியல் நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்கிறார்கள். அந்த விதத்தில், சாதாரண மக்களும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறவேண்டும் என்ற புதுமுயற்சி வந்துள்ள நிலையில், பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியின் மூலமாக மொத்தம் 3 போட்டியாளர்கள் உள்ளே நுழைகிறார்களாம். அவர்கள் வேறுயாருமில்லை, காமன் மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேசன், முனியம்மா மற்றும் கரீஷ்மா போன்ற வெற்றியாளர்களும், பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறுவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.
இதையும் படிங்க: 25 வருச உழைப்பு… சூரியின் சினிமா பயணத்தை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி குறித்து வெளியான புரோமோ பதிவு:
இவர் யாரா இருக்கும்-nu Comment-ல சொல்லுங்க.. 😀😉
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha Bigg BossSeason10Tamil BiggBoss10 BiggBossSeason10 BiggBossTamil BB10… pic.twitter.com/jZ9YQyJdhN
— Vijay Television (@vijaytelevision) August 28, 2026
பிக் பாஸ் நிகழ்ச்சியானது இந்த முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் மாலை 06 மணியளவில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறதாம். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் பலரும் பலந்துகொள்கிறார்கள் என்று இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.