பிக் பாஸ் 10-ல் நுழையும் சீரியல் நடிகர்கள்.. க்ளூ கொடுத்த பிக் பாஸ் குழு!
Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் மீட்டது மக்களுக்கு பேரார்வம் இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இதில் யார் யார் நுழைகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் பிக் பாஸ் குழுவே, துப்பு கொடுத்துள்ளது.
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் 100 நாட்களுக்கும் மேல் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 சீசன்கள் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது, 2026ம் ஆண்டில் தொடங்குகிறது. பிக் பாஸ் தமிழ் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சீசன் 7-னுக்கு பின் அவர் விலகிய நிலையில், தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்து வழங்கிவருகிறார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது தமிழில் மக்கள் பார்த்து ரசித்து கொண்டாடவும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி, 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது, 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியோடு ஆரம்பமாகிறது.
இந்தமுறை பிக் பாஸ் சீசன் 10 வீடானது சர்க்கஸ் கூடாரத்தை போலவே அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிக் பாஸ் குழுவே க்ளூ கொடுத்துள்ளது.




இதையும் படிங்க: சூரியின் பர்த்டே.. மண்டாடி படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்!
பிக் பாஸ் சீசன் 10 குழு கொடுத்த துப்பு தொடர்பாக வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
பிக் பாஸ் சீசன் 10 குழு, ஒரு 4 பேரின் புகைப்படங்களை பகிர்ந்தது இந்த சீரியல் நடிகர்கள் எல்லாம் பிக் பாஸிற்குள் வருகிறார்களா? என மேலும் ஆவலை அதிகரித்துள்ளது. அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் டிவியில் பணியாற்றிய கிட்டத்தட்ட 4 முதல் 5 பேர் போட்டியாளராக பகிர்கிறார்களாம்.
இதையும் படிங்க: நோ அக்டோபர்… இந்த வருசம் செப்டம்பரே… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
பிக் பாஸ் குழு வெளியிட க்ளூ பதிவில் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும்போது, மகாநதி சீரியல் நடிகை லட்சமி பிரியா, நடிகை அக்ஷிதா அசோக் மற்றும் நடிகர் நவீன் போன்ற நடிகர்கள் உள்ளே களமிறங்குவதாக தெரிகிறது. மேலும் கனா காணும் காலங்கள் வெப் தொடர் நடிகை பானுமதியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
பிக் பாஸ் சீசன் 9 போல இல்லாத பிக் பாஸ் சீசன் 10 :
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நிறைய இன்ஸ்டாகிராம் பிரபலங்களை போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சாதாரணமான மனிதர்களும் கலந்துகொள்கிறார்கள். பிக் பாஸ் தி காமம் மேன் என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்கள்கள். இந்த வரிசையில் இதில் நடிகை தேவியணியின் மக்கள் இனியா ராஜகுமாரன் மற்றும் பல சீரியல் நடிகர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது.