AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸ் 10 தமிழில் இணையும் விஜய் டிவி சீரியல் நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?

Bigg Boss S10 Contestants: சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். தமிழ் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் இருவர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அது யார் என விவரமாக பார்க்கலாம்.

பிக் பாஸ் 10 தமிழில் இணையும் விஜய் டிவி சீரியல் நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Aug 2026 19:16 PM IST

பான் இந்திய சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் குழுமத்தின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. இந்தியில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியானது கடந்த 2006ம் ஆண்டிலே நடைபெற தொடங்கியது. ஆனால் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டிலிருந்தே ஒளிபரப்பாக தொடங்கியது. இதுவரை தமிழில் பிக் பாஸ் சீசன் 9 வரை ஒளிபரப்பாகியிருந்த நிலையில், அதில் கடைசியாக வெளியான சீசன் 9ல் வெற்றியாளராக திவ்யா கணேஷ் டைட்டில் வின்னரானார்.

இதற்கு பின், 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், இதில் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர்கள் இருவர் இணைவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரவி தேஜாவின் இருமுடி படத்தினை பாராட்டிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இணையும் விஜய் டிவி சீரியல் நடிகர்கள்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும், 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. ந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை தேவியானியின் மகள் இனியா ராஜகுமாரன் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபல நடிகை ஹேமா ராஜ்குமார் மற்றும் ஆர்யன் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டாக்ஸிக் எனக்கு மிகவும் சிறப்பான ஒரு திரைப்படம் – ருக்மிணி வசந்த்!

விஜய் டிவி புகழ் ஹேமா ராஜ் குமார்:

நடிகை ஹேமா ராஜ்குமார் விஜய் டிவியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா சென்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் இவர் நாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கும் போட்டியாளராக நுழைவதாக பேசப்படுகிறது.

நடிகை ஹேமா ராஜ்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Domnic Antoney (@dom_nicm)

சீரியல் நடிகர் ஆர்யன்:

விஜய் டிவி நடிகர் ஆர்யனும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்கிறாராம். இவர் விஜய் டிவியில் வெளியான பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்திருந்தார். இந்த் சீரியலுக்கு பின், மீனாட்சிகி பொண்ணுங்க என்ற சீரியலிலும் நாயகனாக நடித்திருந்தார். தற்போது வெப் தொடர்களிலும் இவர் நடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆர்யனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Aryan (@aryan_offl)

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், எந்தெந்த போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி மாலை 6 மணியளவில் மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது.

Follow Us