AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Ala Bolelo Making Video: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், சமீபத்தில் பூர்ணாவின் நடனத்தில் அலா பொலேலோ பாடல் வெளியானது. இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
அலா பொலேலோ பாடல் மேக்கிங் வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Aug 2026 16:51 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரை அவரின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் (Super Star) என்று அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படம், சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைக்க, சமீபத்தில் அலா பொலேலோ (Ala Bolelo) என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகியிருந்தது.

இதில் நடிகை பூர்ணா நடனமாட, தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக உள்ளது. அந்த விதத்தில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பூர்ணா இணைந்துள்ள நடித்த இந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்.

இதையும் படிங்க: டாக்ஸிக் எனக்கு மிகவும் சிறப்பான ஒரு திரைப்படம் – ருக்மிணி வசந்த்!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் அலா பொலேலோ பாடலின் மேக்கிங் வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் 2வது சிங்கிள் ரிலீஸ் அப்டேட்:

ஜெயிலர் 2 படமானது, கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் பின்னணி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஜெயிலர் 2 படமானது ஜெயிலர் 1 படத்திற்கு முன் மற்றும் பின் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் லீட் நாயகனாக நடித்துள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு, சுராஜ் வெஞ்சாரமூடு, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரவி தேஜாவின் இருமுடி படத்தினை பாராட்டிய விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி

இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், பல ஆக்ஷன் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ ஏ 16+ என்ற சென்சாரை பரிந்துரை செய்துள்ளதாம். மேலும் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியான நிலையில், 2வது சிங்கிள் 2026ம் ஆண்டு செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us