AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி படத்தை பார்த்து இருக்கீங்களா? எந்த ஓடிடியில் பார்க்கலாம்

Identity movie OTT Update Here | நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஐடென்டிட்டி. இந்தப் படம் எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி படத்தை பார்த்து இருக்கீங்களா? எந்த ஓடிடியில் பார்க்கலாம்
ஐடென்டிட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2026 18:54 PM IST

மலையாள சினிமாவில் எந்த ஜானரில் படம் வெளியானாலும் அது ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஐடென்டிட்டி. இந்தப் படத்தை இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் எழுதி இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ராகம் மூவிஸ் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் ஆகிய நிறுவனங்கள் சார்பாக தயாரிப்பாளர்கள் ராஜு மல்லியத் மற்றும் சி.ஜே. ராய் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், வினய் ராய், அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், ஆதித்யா மேனன், விஷக் நாயர், அர்ச்சனா கவி, கோபிகா ரமேஷ், சுஜித் சங்கர், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், ராகுல் ராஜகோபால், துருவன், கிஜு ஜான், மேஜர் ரவி, ஆஷா மடத்தில், மந்திரா பேடி, ஆர்யா, அசிம் ஜமால், கிருஷ்ணா விஜயச்சந்திரன், மஹிமா ராதாகிருஷ்ணன், அபர்ணா மல்பெரி, நில்ஜா கே பேபி, கிலு ஜோசப், ஷினு ஷியாமலன், லிட்டி தாமஸ், சேது லட்சுமி, விருத்தி விஷால், ராஜா ராணி பாண்டியன், மோகன் தங்கம், ஆடம் சபிக், சுவாதிதாஸ், ஸ்ரீரங், சிக்கு, அகில் பால் மற்றும் அனஸ் கான் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

ஐடென்டிட்டி படத்தின் கதை என்ன தெரியுமா?

படம் கோயம்புத்தூரில் தொடங்குவது போல காட்டப்பட்டது. அப்போ துணிக்கடை ஒன்றில் பெண்கள் துணிமாற்றும் அறையில் கேமரா இருப்பது தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து அந்த போனை வைத்த நபரை மற்றொரு நபர் துரத்துவது போல காட்டபப்ட்டது. ஆனால் அவர்கள் இருவருமே கூட்டாளிகள் என்று காட்டப்படுகின்றது. அந்த நபர் பெண்களை தவறாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.

Also Read… மண்டாட்டி பட ஷூட்டிங்கை முடித்த சூரி… நெக்ஸ்ட் ப்ளான் என்ன?

இப்படி இருக்கும் சூழலில் பணம் கேட்டு மிரட்டும் அந்த நபரை யாரோ கொலை செய்து ஆற்றில் வீசுகிறார்கள். அந்த வழக்கை விசாரிப்பதற்காக வினை கேரளாவில் உள்ள ஒரு பகுதிக்கு வருகிறார். அங்கு டொவினோ தாமஸை சந்திக்கிறார். வழக்கு விசாரணைக்காக டொவினோவின் வரையும் திறமையை பயண்படுத்த நினைக்கும் வினைக்கு அந்த கொலையை செய்தது டொவினோ என்று தெரியவருகிறது.

தொடர்ந்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிகிறது. அதே போல இந்தப் படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு பல ட்விஸ்ட்கள் காத்திருக்கின்றது. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? அப்டேட் இதோ

Follow Us