AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மண்டாட்டி பட ஷூட்டிங்கை முடித்த சூரி… நெக்ஸ்ட் ப்ளான் என்ன?

Actor Soori Next Movie Update | நடிகர் சூரி தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நாயகனாக மாறியுள்ளார். இவரது நடிப்பில் தற்போது மண்டாட்டி படம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மண்டாட்டி பட ஷூட்டிங்கை முடித்த சூரி… நெக்ஸ்ட் ப்ளான் என்ன?
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2026 10:27 AM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடையே அறிமுகம் ஆகி பல சூப்பர் ஹிட் காமெடிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இவரின் பரோட்டா காமெடி எல்லாம் வெளியாகி பல ஆண்டுகளைக் கடந்து இருந்தாலும் தற்போதும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி நடிகர்கள் பலர் இந்தாலும் அவர்களின் உழைப்பு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் தனித்து காட்ட உதவியது. தொடர்ந்து காமெடியனாக பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் சூரி தற்போது கதையின் நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சூரி நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான மாமன் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூரி மண்டாட்டி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படம் கடல் சார்ந்து எடுக்கபப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்டாட்டி படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்த மண்டாட்டி படம் வருகின்ற 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மண்டாட்டி பட ஷூட்டிங்கை முடித்த சூரி:

இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, சூரி தற்போது மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கவுள்ள திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் செப்டம்பர் மாதத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இது அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… Rajinikanth: நான் மது அருந்துவதை விடுவதற்கு காரணம் அவர்தான் – ரஜினிகாந்த் தெரிவித்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தில் அந்த காட்சியை வைத்ததற்கு நன்றி – சின்மயி

Follow Us