கணவரால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த சௌகார் ஜானகி – உருக்கமான சம்பவம்
Sowcar Janaki : பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவால் தனது 94 வயதில் சென்னையில் காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது கணவரால் தனத சொத்துக்களை இழந்ததாக தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆகஸ்ட் 21, 2026 இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் நலபிரச்னையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 21, 2026 இன்றும் மதியம் சரியாக 2 மணியளவில் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவரால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த சௌகார் ஜானகி
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பல்வேறு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சௌகார் ஜானகி. இந்த நிலையில் முன்பு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்திருந்தார். குறிப்பாக அவரது கணவர் குறித்து பேசிய அவர், தனது கணவரின் மதுப்பழக்கத்தால் தனது சொத்துகள் அனைத்தையும் இழந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : Nayanthara: நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம்.. ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நயன்தாரா சொன்ன விஷயம்!




சினிமாவில் நடித்து சேர்த்த சொத்துகள் அனைத்தையும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களால் இழந்தா உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில், தனது கணவரின் மோசமான நிதி பழக்கங்கள் மற்றும் போதைப் பழக்கங்களால் தனது வருமானத்தில் பெரும் பகுதியை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் சௌகார் ஜானகி நடித்துள்ளார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 1969 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரது பேத்தி வைஷ்ணவியும் திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் தமிழ், மலையாளம் , தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார்.
இதையும் படிக்க : ராம் அண்ட் லீலா முதல் மொத ராத்திரி வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ!
இந்த நிலையில் அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.