AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராம் அண்ட் லீலா முதல் மொத ராத்திரி வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ!

Theatre Release Movies List Here | தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது என்றே கூறலாம். அதன்படி இந்த வாரம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ராம் அண்ட் லீலா முதல் மொத ராத்திரி வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Aug 2026 20:26 PM IST

ராம் அண்ட் லீலா படம்: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ராம் அண்ட் லீலா. ரொமாண்டிக் காமெடி மற்றும் ஃபேண்டசி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க நடிகை வர்த்திகா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். சமீபத்தி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் படம் நாளை 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கலிஃபா படம்: மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் கலிஃபா. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் வைசாக் எழுதி இயக்கி உள்ள நிலையில் இன்று 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெத்தலேக குடும்ப யூனிட் படம்: மலையாள சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இயக்குநர் கிரிஷ் ஏடி. இவரது இயக்கத்தில் தற்போது மலையாள சினிமாவில் வெளியாக உள்ள படம் பெத்தலேக குடும்ப யூனிட். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்தப் படம் நாளை 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்

இருமுடி படம்: தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரவி தேஜா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் இருமுடி. தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குனர் சிவ நிர்வாணா இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் நாளை 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத ரத்திரி படம்: ரூரல் காமெடி ட்ராமா பாணியில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மொத ராத்திரி. இந்தப் படத்தில் நடிகர் ரிஷி காந்த் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை அனிஷ்மா அனில் குமார் நாயகியாக நடித்து உள்ளார். இயக்குநர் ராஜா கருப்பசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் படம் நாளை 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Follow Us