AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் எனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது – இயக்குநர் வெங்கி அட்லூரி

Director Venky Atluri about Vishwanath And Sons Collection | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் வசூல் குறித்து இயக்குநர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் எனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது – இயக்குநர் வெங்கி அட்லூரி
இயக்குநர் வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2026 13:20 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் பாணியில் உருவான இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தினை எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் பட வசூல் எனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது:

இந்த நிலையில் படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடி வரும் நிலையில் படக்குழு தொடர்ந்து படத்தின் வெற்றி குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி வெங்கி அட்லூரி பேசியதாவது, நேற்றைய நிலவரப்படி இப்படம் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதை அந்த பி.ஆர். குழுவில் பார்த்தேன். அது எனக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் இந்தச் சென்றடைவு இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை, ஆனால் சூர்யா சார் அதை முன்கூட்டியே கணித்திருந்தார். ஏனென்றால், ரசிகர்களுக்கு ஒரு புதிய விதமான படைப்பை வழங்கினால் அவர்கள் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு வழக்கமான கமர்ஷியல் படத்தைக்கூடக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் ஒரு குடும்பப் படத்தைத்தான் விரும்பினார் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Nayanthara: கவினை ஒரு சூப்பர் ஸ்டாராகப் பார்க்க விரும்புகிறேன் – நயன்தாரா!

Follow Us