ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்பது… தர்மதுரை படம் குறித்து எமோஷ்னலாக பேசிய இயக்குநர் சீனு ராமசாமி
10 Years Of Dharmadurai Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மண் சார்ந்த படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான தென்மேற்கு பருவகாற்று, நீர் பறவை, தர்ம துரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுறை மற்றும் இடிமுழக்கம் ஆகியப் படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான தர்மதுரை படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தமன்னா இருவரும் நாயகிகளாக நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் குறித்து தற்போது இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட எமோஷ்னல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தர்மதுரை படம் குறித்து எமோஷ்னலாக பேசிய இயக்குநர் சீனு ராமசாமி:
மக்களின் மனங்களில் ஒரு திரைப்படம் தொடர்ந்து நிலைத்திருக்கிறதா என்பதில்தான் அதன் உண்மையான வெற்றியோ அல்லது தோல்வியோ அடங்கியுள்ளது என்று நான் கருதுகிறேன். உங்கள் அளப்பரிய அன்பினால், தர்மதுரை இன்று தனது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இப்படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய திரு. RK சுரேஷ் மற்றும் திரு. வெங்கட் (RK சுரேஷின் மூத்த சகோதரர்) ஆகியோருக்கும், தங்கள் கலைத்திறனால் இப்படத்திற்கு உயிர் கொடுத்த ஒவ்வொரு திறமையான கலைஞருக்கும் தொழில்நுட்பக் கலைஞருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Dear Friends,
To me, a film’s true success or failure lies in whether it continues to live in the court of the people. With your overwhelming love, #Dharmadurai enters its 10th year today!
My heartfelt gratitude to Mr. RK Suresh & Mr. Venkat (Elder brother of RK Suresh) for… pic.twitter.com/vnf6haRJJC
— Seenu Ramasamy (@seenuramasamy) August 19, 2026
Also Read… அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 பட ஷூட்டிங் பூஜை எப்போது?