AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Vijay Sethupathi: நிற்காமல் செல்லும் இரயிலுக்குள் கொலைகள்… விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Train Movie Trailer: தமிழில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ட்ரெயின். விஜய் சேதுபதி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், அதிரடி கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.

Vijay Sethupathi: நிற்காமல் செல்லும் இரயிலுக்குள் கொலைகள்… விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
ட்ரெயின் படத்தின் ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2026 17:10 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரை “மக்கள் செல்வன் விஜய் சேதுபதி” என்று ரசிகர்கள் அன்போடு அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் இதுவரை இரு திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குநர் இயக்கத்தில் காந்தி டால்க்ஸ் (Gandhi Talks) என்ற மௌன திரைப்படம் மற்றும் தமிழ் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் பத்தா (Baththa Movie) என்ற பீல் குட் திரைப்படங்கள் என இரு படங்கள் வெளியாகியிருந்தது. இந்த படங்களின் வரிசையில் மூன்றாவதாக வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ட்ரெயின் (Train Movie).

இதை தமிழ் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் (Director Mysskin) இயக்கியுள்ள நிலையில், கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமானது வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.இதை தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பேக் டூ பேக் 3 கெட்டப்.. இந்திய சினிமாவில் நடிகை சாய் பல்லவி புரியும் சாதனை!

ட்ரெயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்த எக்ஸ் பதிவு:

விஜய் சேதுபதியி ட்ரெயின் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த ட்ரெயின் பட ட்ரெய்லரானது, விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறார். நிற்காமல் செல்லும் இரயிலுக்குள் க்ரைம் கொலைகள் நடக்கிறது. அதற்க்கு காரணம் விஜய் சேதுபதியா ? சந்தேம் எழுகிறது. இதில் நாசர் வில்லனாக நடித்திருக்கும் நிலையில், அதிரடியாக இந்த ட்ரெயின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

ட்ரெயின் திரைப்படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார்:

இந்த ட்ரெயின் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருடன் ஸ்ருதிஹாசன், நாசர், நரேன் மற்றும் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் ஏஜிஎஸ்29 பட ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு!

இந்த படம் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் நிறைவடைந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு உள்ளது. இப்படமானது 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சென்சார் சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில், 12 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகளில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us