AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குளிருக்கு ஹீட்டர் போடுறீங்களா? கரண்ட் பில் எகிறுமா?

குளிர்காலத்தில் ரூம் ஹீட்டரை நீண்ட நேரம் பயன்படுத்தினால் மின்சாரக் கட்டணம் கணிசமாக அதிகரிக்கலாம். ஹீட்டரின் வாட்ஸ் திறன், பயன்படுத்தும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து மின்சார நுகர்வு மாறுபடும். தேவையான நேரத்தில் மட்டும் ஹீட்டரைப் பயன்படுத்துவது, கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது போன்ற எளிய வழிகள் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்கலாம்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Nov 2026 17:02 PM IST
குளிர்காலத்தில் வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருக்க பலரும் ரூம் ஹீட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதனைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது மின்சார நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஹீட்டரின் வாட்ஸ் (Watt) திறன் மற்றும் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தே மின்சாரச் செலவு அமையும். எனவே, ஹீட்டர் வாங்குவதற்கு முன்பே அதன் மின்சாரத் தேவையைத் தெரிந்துகொள்வது அவசியம்.

1 / 5
1000 வாட்ஸ் திறன் கொண்ட ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்கினால் சுமார் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதேபோல், 1500 வாட்ஸ் ஹீட்டர் ஒன்றரை யூனிட்டும், 2000 வாட்ஸ் ஹீட்டர் இரண்டு யூனிட்டும் பயன்படுத்தும். 2500 வாட்ஸ் ஹீட்டர் ஒரு மணி நேரத்தில் 2.5 யூனிட் மின்சாரத்தைச் செலவிடும். இதனால் அதிக வாட்ஸ் திறன் கொண்ட ஹீட்டர்களை நீண்ட நேரம் பயன்படுத்தினால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும்.

2 / 5
உதாரணமாக, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.8 எனக் கணக்கிட்டால், 1000 வாட்ஸ் ஹீட்டரை தினமும் 5 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்திற்கு சுமார் ரூ.1,200 செலவாகலாம். 1500 வாட்ஸ் ஹீட்டருக்கு ரூ.1,800 வரையும், 2000 வாட்ஸ் ஹீட்டருக்கு ரூ.2,400 வரையும் செலவாகலாம். 2500 வாட்ஸ் ஹீட்டரை தினமும் 5 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்திற்கு ரூ.3,000 வரை செலவாக வாய்ப்புள்ளது. இவை தொடர்ந்து முழுத் திறனில் இயங்குவதைக் கணக்கில் கொண்ட தோராயமான மதிப்பீடுகள் ஆகும்.

3 / 5
ஹீட்டரைத் தேவையில்லாமல் நீண்ட நேரம் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். அறையை வெப்பமாக்கிய பிறகு அதன் வெப்பநிலையைக் குறைத்து பயன்படுத்தலாம். கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைத்தால் அறையின் வெப்பம் விரைவாக வெளியேறாது. மேலும், அறையில் யாரும் இல்லாதபோது ஹீட்டரை அணைத்து வைப்பதன் மூலமும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

4 / 5
ஹீட்டர் வாங்கும்போது அதன் விலை மற்றும் வடிவமைப்பை மட்டும் பார்க்காமல் மின்சாரத் திறனையும் கவனிக்க வேண்டும். அறையின் அளவுக்கு ஏற்ற வாட்ஸ் திறன் கொண்ட ஹீட்டரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தானியங்கி வெப்பநிலைக் கட்டுப்பாடு (Thermostat), அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் பாதுகாப்பு வசதி போன்ற அம்சங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். குறிப்பாக, தரமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் கொண்ட ஹீட்டர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

5 / 5
Follow Us