அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்னவாகும்?.. இதுதான் நிலவரம்!
Gold Price Prediction 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி நடத்த உள்ள கூட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்னவாகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதிரி புகைப்படம்
- 2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம் மறுநாள் சரிவை சந்திக்கிறது. இவ்வாறு தொடர் ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த நாள் தங்கம் என்னவாகும் என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
- குறிப்பாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கடும் உச்சத்தில் இருந்த தங்கம், அதன் பிறகு தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ரூ.16,000-ல் இருந்து தங்கம் விலை ரூ.11,000 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா, உயருமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
- அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 2026 டிசம்பர் மாதம் நடத்த உள்ள கூட்டத்தின் முடிவுகளை தான் உலக நாடுகள் கவனித்து வருகிறது. காரணம், தங்கம் விலையை தீர்மானம் செய்யும் முக்கிய அம்சமாக அது உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், டிசம்பர் மாதம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
- செப்டம்பரில் வட்டியை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி, அக்டோபர் மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் அப்படியே வைத்தது. அப்போது அமெரிக்காவின் பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கை விட அதிகமாக இருந்தபோதிலும் வட்டி உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் தான், டிசம்பரில் 25 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை வட்டி அல்லது வருமானம் தராத சொத்துகளாக உள்ளன. ஆனால், அமெரிக்க மத்திய வங்கி வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் வட்டியுடன் கூடிய வருமானம் கிடைக்கும். எனவே தான், வட்டி உயர்த்தப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்புகிறது. அதுவே தங்கம் விலை குறைய காரணமாக உள்ளது.
Follow Us




