AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

RJ Balaji: சூர்யா 49, 50 நம்பர் கேம்-ல் மாட்ட எனக்கு விருப்பமில்லை.. சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

RJ Balaji on Suriyas Next Film: தனது இயக்கத்தில் வெளியான 3வது திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தவர்தான் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சூர்யாவின் 45வது திரைப்படமான கருப்பு படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். இந்நிலையில் இதன் பிறகு சூர்யாவுடன் புதிய திரைப்படத்தில் இணைவது குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

RJ Balaji: சூர்யா 49, 50 நம்பர் கேம்-ல் மாட்ட எனக்கு விருப்பமில்லை.. சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜிImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 27 Nov 2026 11:28 AM IST

தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவர் சினிமாவில் துணை நடிகராக நுழைந்து தற்போது இயக்குநராக படங்களை இயக்கிவருகிறார். இவர் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், துணை வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்திருந்தார். அதன் பிறகு முக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என்ற படத்தை இயக்கி இயக்குநராக நுழைந்த நிலையில், அதன் பிறகு வீட்டுல விஷேஷம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த வரிசையில் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இவர் இயக்கிய 3வது திரைப்படம்தான் கருப்பு (Karuppu Movie). இந்த படத்தில் சூர்யா மற்றும் திரிஷா (Trisha) இணைந்து நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படம் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான நிலையில், மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலே அதிக வசூலை பெற்றிருந்த படமாக இது அமைந்திருந்தது. அந்த விதத்தில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணியில் மீண்டும் புதிய படம் ஓன்று உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆர்.ஜே.பாலாஜி மனம்திறந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அந்தப் பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை.. மகாராஜா பட நடிகை சாச்சனாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்!

சூர்யாவுடன் புதிய திரைப்படத்தில் இணைவது குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி:

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, அதில் “சூர்யா சாருடன் எப்போதுமே படம் பண்ண காத்திருக்கிறேன். கடவுளின் புண்ணியத்தினால் வாய்ப்பு கிடைக்குமென நினைக்கிறேன். ஆனால், சூர்யா 49, சூர்யா 50 என்ற நம்பர் கேமில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் சூர்யா சாருடன் இணையும்போது, அதற்க்கு முந்தைய படத்தை விடவும் அப்படம் சிறப்பாக இருக்கவேண்டும் என எண்ணி உழைப்பேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் புதிய படத்தில் இணைவது பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேசியதாக வைரலாகும் பதிவு:

 

இருவரின் கூட்டணியில் வெளியான கருப்பு திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிறப்பான வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்த கூட்டணி கருப்பு 2 படத்தில் இணைவதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: சூர்யா – ஜோதிகா காதல் அப்போவே எனக்கு தெரியும் – லைலா பகிர்ந்த விஷயம்!

தற்போது சூர்யா இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 படத்தில் நடிக்கிறார். இதன் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சூர்யா49 மற்றும் மண்டாடி பட இயக்குநருடன் சூர்யா50 படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜியுடன் எப்போது படத்தில் இணைகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us